பொறுப்பா நடந்துக்காங்க.. இல்லையினா மரியாதை கெட்டுடும்.. யாரைச் சொல்கிறார் தனஞ்செயன்
சென்னை: மொத்த திரையுலகமுமே தற்போது விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவிற்கு சென்றது குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் மனைவி சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்திருக்கும் நிலையில், விஜய் த்ரிஷாவுடன் இணைந்து திருமண விழாவிற்கு சென்று உள்ளார். சங்கீதா தனது விவாகரத்து கோரிக்கை மனுவில், விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி இருக்கையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஜோடியாக இணைந்து திருமண விழாவிற்குச் சென்றது தொடர்பாக கடுமையாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவர் விஜய் மற்றும் த்ரிஷா பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் தனஞ்செயன் குறிப்பிடுவது விஜய் குறித்துதான் என்றும் பலரும் முடிச்சு போட்டு வருகிறார்கள்.
அவரது பதிவில்," மிகுந்த புகழ் பெற்றவர்கள், சாதாரண மக்களுக்கு நேர்மையான மற்றும் மரியாதையான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாக காட்டும் பெரிய பொறுப்பு உடையவர்கள். அந்த பொறுப்பை அவர்கள் புறக்கணித்தால், மக்கள் அவர்களிடம் வைத்திருந்த மரியாதையை இழந்து விடுவார்கள்.
ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பமே முதன்மை. குடும்பத்தை அலட்சியமாக நடத்தி, மனதளவிலோ உணர்ச்சி அளவிலோ காயப்படுத்தினால், அவர்களிடம் இருந்த அன்பும் மரியாதையும் மெதுவாக குறைந்து போய்விடும். இப்படியான செயல்களை எந்த சூழ்நிலையிலும் சாதாரணமாகவோ அல்லது நியாயப்படுத்தியோ பார்க்க முடியாது.
தவறான முன் உதாரணம்: குடும்பத்தை முக்கியமாக கருதும் ஒருவராக, சில முன்னணி நடிகர்கள் தங்கள் செயல்களால் மில்லியன் கணக்கான ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பலரும் லைக் செய்து வருகிறார்கள். இணையவாசி ஒருவரோ, " Correct sir .. மனசு வலிக்குது ஆனால் என்ன பண்றது.. கடந்து தான் போகணும்...காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது...நம்ம வாழ்க்கையை நாமதான் பார்த்துக்கணும்... இதுவும் கடந்து போகும்" என்று பதிவிட்டுள்ளார்.

நார்மலைஸ் செய்யாதீர்: மற்றொரு இணையவாசியோ, அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீங்கள் கருத்து சொல்லாதீர்கள் என்று பதிவிட, அதற்கு " எல்லாவற்றையும் நார்மலைஸ் செய்யாதீர்கள். ஒருவர் திருமண உறவில் இருந்து கொண்டு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தவறு, விவாகரத்து செய்துவிட்டு யாரோடு வேண்டுமானாலும் இணைந்து வாழட்டும் யார் வேண்டாம் என்று சொன்னார்கள். மேலும் நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் தனஞ்செயன் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











