கொரோனா வைரஸ்க்கு பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் பலி.. பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்!

சென்னை: பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் கொரோனா வைரஸ்க்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

சுஷாந்த் சிங் தற்கொலையின் போது என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்ஜெயன். இவர் மிஸ்டர் சந்திரமவுளி, காற்றின் மொழி, ஊமை விழிகள், கபடதாரி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மூத்த சகோதரர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

கொரோனா கொண்டு சென்றது

இதுதொடர்பாக தனஞ்ஜெயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார். அதில், கொரோனா வைரஸ் என் அன்பான மூத்த சகோதரரை கொண்டு சென்றுவிட்டது. 59 வயதில் அவர் ஆரோக்கியமாக இருந்தார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 5 நாட்களில் காலமாகிவிட்டார். அவரது மனைவி மற்றும் மகனுக்கு சோதனை செய்யப்பட்டது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

அதில் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் அதிலிருந்து வெளியே வரும்போது, சிலர் உயிர் இழக்கிறார்கள். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் நண்பர்கள்.. என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டிவிட்டில், இந்த ட்வீட் கொடிய தொற்றுநோயைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக பதிவிடப்பட்டது.

கவனித்துக் கொள்ளுங்கள்

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எனது சகோதரரின் குடும்பத்தைப் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அவர்கள் விரைவாக மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்கள். உங்களையும் உங்கள் குடும்ப நண்பர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

தாயார் மரணம்

தாயார் மரணம்

இப்போதைக்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.. இவ்வாறு டிவிட்டியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனஞ்ஜெயனின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார். அதற்குள் அவரது குடும்பத்தில் மற்றொரு துக்க சம்பவம் நிகழ்ந்திருப்பது திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: death மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X