Dhananjayan: கங்குவா படத்தில் உதிரனுக்கும் மாஸ் சாங் இருக்கு.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த கதை தேர்வுகள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அடுத்தடுத்த வெற்றிக்கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுடன் விக்ரம் படமும் சூர்யாவிற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து பாலாவுடன் வணங்கான் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்தப் படம் பாதி சூட்டிங்கிலேயே நிறுத்தப்பட்டது வருத்தத்தை அளித்தாலும் அடுத்ததாக சூர்யா -சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படம் அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை மாஸ் காட்டியுள்ள நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் சிவா நிறைவு செய்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த கிராபிக்ஸ் பணிகள், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகிறது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு இணையான மிரட்டலான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் நிறைவையும் தந்து வருகின்றன. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தன்னுடைய படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யாவின் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அந்தப்படம் பாதியிலேயே டிராப் ஆனது வருத்தத்தை தந்த போதிலும், அடுத்ததாக சிவா இயக்கத்தில் அவர் இணைந்துள்ள கங்குவா படம் உற்சாகத்தையும் ஆசுவாசத்தையும் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது சிஜி வேலைகள், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பாபி தியோல் மிரட்டல் போஸ்டர்: படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனிடையே படத்தின் வில்லன் பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் படத்தின் அவரது கேரக்டர் போஸ்டரும் வெளியானது. இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. படத்தில் உதிரன் என்ற பவர்ஃபுல் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இதுதவிர படத்தில் அவருக்கு சூப்பர் பாடல் ஒன்றும் உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலின் காட்சிகளை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அந்த அளவிற்கு பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்: அனைவரும் கூறும்படி படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக அமைந்தால், ஹீரோவின் கேரக்டரும் வலிமையாக அமையும் என்று தெரிவித்துள்ள தனஞ்செயன், படத்தில் பாபி தியோலின் வில்லன் கேரக்டர் இதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதள பக்கத்திற்கு செல்லவே தனக்கு பயமாக இருப்பதாகவும் தான் எந்த விஷயத்தை பேசினாலும், ரசிகர்கள் கங்குவா அப்டேட்டை கேட்பதாகவும் அவர் உற்சாகத்துடன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்குவா ரிலீஸ் தேதி: இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் சிவாவிடம் பேசியபோது, ரிலீஸ் தேதி குறித்து முடிவு செய்ய தயாரிப்பு தரப்பிடம் அவர் கேட்டதாகவும் அதற்கேற்ப தான் பணியாற்றி படத்தை ரிலீஸ் செய்வேன் என்று சிவா தெரிவித்ததாகவும் தனஞ்செயன் பாராட்டு தெரிவித்துள்ளார். சூர்யாவிற்கு இந்திய அளவில் சிறப்பான மார்க்கெட் இருப்பதால் மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் குறித்து சரியான நிலவரத்தை வைத்துதான் இந்தப் படத்தின் ரிலீசை முடிவு செய்ய வேண்டியுள்ளது என்றும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக படம் அமையும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications