அஜித் ஹாப்பி.. தயாரிப்பாளர் ஹாப்பி.. மகிழ் திருமேனியும் ஹாப்பி.. உற்சாகத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் படம் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இருந்தபோதிலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகியுள்ள விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இந்தப் படத்தின் கலெக்ஷன்ஸ் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 140 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வசூல் குறித்து லைகா விரைவில் முறையாக அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை அதிகமாக திருப்தி படுத்தவில்லை. தனக்கு உண்மையாக இல்லாத மனைவிக்காக அஜித் இந்த அளவிற்கு மெனக்கெட வேண்டுமா என்ற விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

Ajithkumar Vidaamuyarchi movie Dhananjayan

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் ரிசாலீசாகியுள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேணி இயக்கியுள்ள நிலையில் படம் அஜித் படமாகவும் இல்லாமல் மகிழ் படமாகவும் இல்லாமல் வேறு ஒரு ஜானரில் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்துள்ள நிலையில் அஜித்தை தவிர்த்து அவரது விருப்பம் குறித்து இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவங்களை அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்துள்ளனர். ஒருவனுக்கு ஒருத்தி என்று காலங்காலமாக சினிமாவில் அதிகமாக முன்வைக்கப்பட்டுவரும் கான்செப்டை இந்தப் படம் உடைத்துள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி: இதுபோன்ற கதைக்களங்களை நாம் முன்னதாக பார்த்திருந்தாலும் அஜித் போன்ற முன்னணி நடிகர் எப்படி இத்தகைய கதைக்களத்தில் நடித்தார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படம் கடந்த ஒரு வாரத்தில் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வந்தாலும் அஜித்தின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் படத்தின் கலெக்ஷன்ஸ் குறைவுதான் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் விடாமுயற்சி படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 140 கோடி ரூபாய்களை கலெக்ட் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சிறப்பான வசூலை பெற்று வருவதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

தனஞ்செயன் பாராட்டு: கடந்த தைப்பூசத்தையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமும் இந்தப் படத்தை ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5 நாட்கள் கடந்தபிறகும் விடுமுறை தினத்தில் மக்கள் இந்தப் படத்தை பார்க்க வரும் நிலையில் அவர்கள் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு தரப்பு அறிவிக்கும் என்று அவர் தனது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளார். அவர்கள் இந்தப் படத்தால் மகிழ்ச்சியாக உள்ளதாக மகிழ் திருமேனி தன்னுடைய அடுத்தடுத்த பேட்டிகளில் கூறுவதையும் தனஞ்செயன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அஜித்குமார் ஹாப்பி: ஒரு இயக்குநராக தான் ஹாப்பி, அஜித்குமார் ஹாப்பி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஹாப்பி என்று மகிழ் திருமேனி கூறியுள்ளதையும் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களையும் மற்றும் சில விமர்சகர்களையும்கூட விடாமுயற்சி படம் கவர்ந்துள்ளதாகவும் கூறியுள்ள தனஞ்செயன், சிலருக்கு இந்தப் படம் கனெக்ட் ஆகாததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் படம் போதிய கலெக்ஷனை கொடுத்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X