விஜய்,அஜித் போட்டியில் சூர்யா மிஸ்ஸானது ஏன்? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

சென்னை: விஜய்,அஜித் போட்டியில் சூர்யா மிஸ்ஸானது இதனால் தான் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.

முகமூடி, அஞ்சான், இறுதி சுற்று, தெய்வத் திருமகள் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ள தனஞ்ஜெயன் இரண்டு முறை தேசிய விருதை வாங்கி உள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

producer dhananjayan interview about suriya

சூர்யா மிஸ்: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், விஜய்,அஜித் போட்டியில் சூர்யா மிஸ்ஸானது குறித்து விளக்கினார். அதில், விஜய், அஜித் இடையேயான போட்டி இப்போது ஆரம்பமாகவில்லை, அது 2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி, திருமலை அதே போல அஜித்திற்கு வரலாறு என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து இருவரும் டாப் நடிகர்களாகி விட்டார்கள்.

ஐந்து வருட இடைவெளி தயாரித்துள்ளார்: அந்த நேரத்தில், சூர்யாவிற்கு பெரிய ஹிட் படம் எதுவும் கிடைக்கவில்லை, சூர்யா நடித்த காக்க காக்க படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஐந்து வருட இடைவெளிக்கு பிறகுதான் சிங்கம் மிகப்பெரிய ஹிட்படமாக அமைந்தது. இந்த ஐந்து வருட கேப்பில் விஜய், சூர்யா இருவரும் டாப் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்கள்

producer dhananjayan interview about suriya

இதுதான் காரணம்: ஒருவேளை விஜய், அஜித் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த காலகட்டத்தில் சூர்யாவின் சிங்கம் படம் வந்திருந்தார். விஜய், அஜித்,சூர்யா இவர்களில் யார் டாப் என்கிற போட்டி வந்து இருக்கும். இதனால், தான் சூர்யாவால் மூன்றாவது இடத்தைத் தான்பிடிக்க முடிந்தது அவர்களை முந்தவே முடியவில்லை. மூன்றாவது இடத்தில் அவர் இருந்தாலும் அது முதல் இரண்டு இடமாகவே பார்க்கப்படுகிறது.

கங்குவா நிச்சயம் வெற்றி பெறும்: சூரரைப்போற்று, ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூர்யாவின் டிஜிட்டல் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருந்தாலும், தியேட்டரில் வெளியான படம் சுமாரான வரவேற்பை பெற்றதால் ரசிகர்களிடம் ஒருவிதமான தயக்கம் இருக்கு. அந்த தயக்கத்தை கங்குவா திரைப்படம் நிச்சயம் உடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X