Dhananjayan: நம்மை சுற்றி நன்றி கெட்ட ஈனப்பிறவிகள் பலர் இருக்காங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுப்பு!
சென்னை: தயாரிப்பாளர், விநியோகஸ்தர், சினிமா ஆலோசகர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் செயல்பட்டு வரும் தளஞ்செயன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சினிமா ஆலோசகராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயல்பட்டு வருபவர்.
அடுத்தடுத்து தங்கலான், கங்குவா படங்கள் குறித்த அப்டேட்டுகளை இவர் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். இது மட்டுமில்லாமல் பல விஷயங்களில் வெளிப்படையாக பேசி சமூக வலைதளங்களில் பல்வேறு ட்ரோல்களுக்கும் இவர் ஆளாகி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள பதிவு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் தனஞ்செயன்: தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரைப்பட ஆலோசகர் என சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனஞ்செயன். இவர் அடுத்தடுத்து தன்னை மீடியா வெளிச்சத்திலேயே வைத்திருப்பவர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஆலோசகராகவும் தனஞ்செயன் உள்ள நிலையில் அடுத்தடுத்து தங்கலான், கங்குவா படங்கள் குறித்து அவர் பல விமர்சனங்களையும் அப்டேட்டுகளையும் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் கங்குவா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு இரண்டு பெரிய நடிகர்கள்தான் காரணம் என்று அதிரடியாக பேசியிருந்தார்.
தனஞ்செயன் பதிவு: இவர் பேட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் ட்ரோல்களை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னை குறித்த அவதூறான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று தனஞ்செயன் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் தனஞ்செயன், தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நம்மை சுற்றி பல துரோகிகளும் நன்றி கெட்ட ஈனப் பிறவிகளும் இந்த உலகில் நிறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம் மட்டுமே துணை: இந்த உலகில் நம் குடும்பமும் குறிப்பாக மனைவியும் நம்மோடு இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே நம்முடைய துணை என்று குறிப்பிட்டுள்ள தனஞ்செயன், அவர்களை நாம் எப்போதும் இழக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அவர்கள் தான் நம்முடைய வெற்றிக்கு வழிகாட்டி என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த சர்ச்சைகளில், ட்ரோல்களில் சிக்கிவரும் தனஞ்செயன், இந்த பதிவின்மூலம் யாரை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என்பது குறித்து ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தடுத்த படங்கள்: தமிழில் அபியும் நானும், அவள் பெயர் தமிழரசி, சித்து +2 ஆகிய படங்களை தயாரித்துள்ளார் தனஞ்செயன், இந்தி , மலையாள மொழிகளிலும் அடுத்தடுத்து தயாரிப்பாளராக செயல்பட்டுவரும் தனஞ்செயன், கோடியில் ஒருவன், கொலை, ரத்தம் படங்களையும் கூட்டாக தயாரித்துள்ளார். தமிழ் சினிமா குறித்தும் அடுத்தடுத்த புத்தகங்களை எழுதியுள்ளார். விநிகோஸ்தராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











