கங்குவா டீசர் பார்த்து அஜித் செம ஹாப்பி.. அடுத்தப்படம் சிவாகூட தான்.. பிரபல தயாரிப்பாளர் உறுதி!
சென்னை: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் அஜித்தின் ஏகே 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்று அதை முடித்துக் கொடுக்க அஜித் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக ஏகே 64 படத்தில் இயக்குனர் சிவாவுடன் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சிவா, சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான சூழலில் இந்த டீசர் நடிகர் அஜித்தை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சிவா மற்றும் அஜித்தின் கூட்டணி உறுதிப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூழலில் அடுத்ததாக பட குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக ரஷ்யா செல்லவுள்ளனர். அங்கு ஆக்சன் காட்சிகளின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகவும் ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே காணப்படுகின்றன.
அஜித்தின் ஏகே64 படம்: அஜித் அடுத்ததாக தன்னுடைய ஏகே64 படத்திற்காக இயக்குனர் சிவாவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என இந்த கூட்டணி தொடர்ந்து 4 படங்களில் இணைந்து வெற்றிப்பட கூட்டணியாக அமைந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித் மற்றும் சிவா இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த நட்பு காணப்படும் சூழலில் அடுத்ததாக ஏகே64 படத்தில் இந்த கூட்டணி இணைவது ஏறக்குறைய உறுதிப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதை அஜித்குமார் பார்த்ததாகவும் இதையடுத்து அஜித்குமார் - சிவா கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும் தனஞ்செயன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே இயக்குனர் மோகன் ராஜாவும் அஜித்திற்கு கதை சொல்லி உள்ளதாகவும் மோகன் ராஜா அல்லது சிவா இருவரில் ஒருவர் தான் ஏகே 64 படத்தை இயக்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா பாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதால் அவர் அந்தப் படத்தில் இணைவாரா அல்லது அஜித்துடன் ஏகே 64 படத்தில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விரைவில் அறிவிப்பு: சூர்யாவின் கங்குவா படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், சிவாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் மற்றும் சிவா கூட்டணி முன்னதாக அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் சிறப்பாக இணைந்த சூழலில் மீண்டும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கங்குவா படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எகிறியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பொருட்செளவில் உருவாகியுள்ள சூர்யா படம் இது என்ற பெருமை கங்குவா படத்திற்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications











