ரஜினி போல மாஸ் ஹீரோவோட மோத விரும்பலை.. சூர்யாவின் கங்குவா ரிலீஸ் குறித்து பேசிய தனஞ்செயன்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கேரியரில் மாஸான படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தின் ரிலீசில் தொடர்ந்து அடுத்தடுத்த குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த தேதியிலிருந்து படம் பின்வாங்கியுள்ளது.
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், ரஜினியுடன் மோத விரும்பவில்லை என்று சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தெளிவுப்படுத்தியுள்ளார். மெய்யழகன் பட ஆடியோ ரிலீசில் பேசிய அவர் இந்த விஷயம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து படம் நவம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் மிகவும் பிரம்மாண்டமாக சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளது. சூர்யாவின் கேரியரிலேயே மிகவும் அதிகமான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், டீசர் என வித்தியாசமான அனுபவத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்துவந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தேதியிலிருந்து படக்குழு பின்வாங்கியுள்ளது.
தள்ளிப்போன கங்குவா ரிலீஸ்: அக்டோபர் 10ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் போலி என்கவுண்டருக்கு எதிராக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியின் லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தேதியில் கங்குவா படம் ரிலீசாகாது என்று நகடிர் சூர்யா அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தியின் மெய்யழகன் பட ஆடியோ வெளியீட்டில் பங்கேற்ற சூர்யா, இதனை அறிவித்திருந்தார்.
ரிலீஸ் தள்ளிப்போக காரணங்கள்: இந்நிலையில் இதை தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார். அக்டோபர் 10ம் தேதிதான் கங்குவா படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டதாகவும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரையும் திட்டமிட்ட நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டதாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார். வேட்டையன் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகும் என்று ஞானவேல் ராஜா நினைத்ததாகவும் அதையொட்டியே கங்குவா படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது அக்டோபர் 10ம் தேதி ரிலீசிலிருந்து தள்ளிப்போக இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு மாதங்களில் ரிலீஸ்: ஞானவேல் ராஜாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் மாஸ் ஹீரோவான ரஜினிக்கு எதிராக கங்குவா படத்தை ரிலீஸ் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை என்றும் அப்படி செய்தால் ரஜினிக்கு எதிராக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்றும் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படம் சோலோவாக ரிலீசானால் மட்டுமே பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்தின் கலெக்ஷனை பெறுவதற்கும் காரணமாக இருக்கும் என்றும், இத்தகைய காரணங்களால் தற்போது கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாகவும் இன்னும் இரு மாதங்களில், இந்த ஆண்டிற்குள்ளாகவே கங்குவா படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மல்ட்டிபிளக்சில் அதிகமான ரிலீஸ்: இதனிடையே, வட இந்தியாவிலும் அதிகமான மல்ட்டிபிளக்சில் கங்குவா ரிலீசாகவுள்ளதாகவும் 3000 திரையரங்குகளில் மல்ட்டிபிளக்சில் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய ஞானவேல் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவிலும் ஓவர்சீசிலும் மற்ற படங்களை திட்டமிட்டு கங்குவா படத்தின் ரிலீசை ஞானவேல் ராஜா திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











