Vijay: விஜய்யின் உண்மையான பயம்.. லியோ இசை வெளியீடு ரத்துக்கு காரணம் பகிர்ந்த தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக கடந்த 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

லியோ இசை வெளியீடு ரத்துக்கு உண்மையான காரணம் சொன்ன தயாரிப்பாளர்: நடிகர் விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ. லோகேஷ் கனகராஜூடன் லியோ படத்தின்மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்துள்ளார். படத்தில் பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த கிளிம்ப்ஸ், வீடியோக்கள், போஸ்டர்கள், சிங்கிள்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கடந்த சில விஜய் படங்களின் டீசர் வெளியாகாத நிலையில், இந்தப் படத்தின் டீசரும் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் ட்ரெயிலர் வரும் 5ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் மிரட்டியது. இதையடுத்து ட்ரெயிலரும் அதிரடி சரவெடியாக அமையும் என்று ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
கடந்த 30ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு எதைக் குறித்து இருக்கும் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்தாத குறையாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி, மதுரை, கோவை, சென்னை, துபாய் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதையடுத்து இறுதியாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டன.
ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சமீப காலங்களில் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள விஜய்யின் இந்த நிகழ்ச்சியை நடத்த அரசியல் தலையீடு இருந்ததாகவும் அதனால் பயந்தே விஜய் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால், கூட்டத்தை சமாளிக்க முடியாது என்று விஜய் பயந்ததன் விளைவாகவே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். விஜய் மிகவும் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியில் 6 ஆயிரம் பேர் தான் உள்ளே அனுமதிக்கப்பட முடியும். ஆனால் 25,000 பேர் விஜய்க்காக அரங்கத்தின் வெளியில் காத்திருக்க வாய்ப்புள்ளதால் அவர்களை ஏமாற்ற விரும்பாமல் தான் நிகழ்ச்சியை விஜய் ரத்து செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சி ரத்துக்கு பின்னணியில் ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுவதை அவர் மறுத்துள்ளார். அதிகமான ரசிகர்கள் அரங்கத்தின் வெளியில் கூடினால், அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தனஞ்செயன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். லியோ படத்தை மினிமம் கேரண்டியில் லலித்குமார் அதிக விலைக்கு விற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











