Captain Miller: கேப்டன் மில்லர் 3 பாகங்களாக உருவாக காரணம்.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: அடுத்தடுத்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான இவரது வாத்தி படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தன்னுடைய என்ட்ரியை தனுஷ் துவங்கியுள்ளார். இந்தப் படம் சார் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்து பேசிய தனஞ்செயன்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது கேப்டன் மில்லர். இந்தப் படத்தை ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். பீரியட் படமாக உருவாகிவரும் கேப்டன் மில்லர் படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்திலும் டீசர் அடுத்த மாதத்திலும் வெளியாகும் என்று படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், அவரது முந்தைய படங்களின் பர்ஸ்ட் லுக்கை பீட் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துவரும் நிலையில், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பீரியட் படமாக உருவாகிவரும் கேப்டன் மில்லர் தற்போது சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 1940களில் இந்தப் படம் பயணித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கடந்த 1990ம் ஆண்டுகளில் நடப்பது போல அடுத்த பாகமும் தற்போதைய காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது, அடுத்தடுத்த கதைக்களங்கள் மிகப்பெரிய அளவில் உருவாகியதாகவும் அதனால்தான் படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது சமீபத்திய தெரிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் சிறப்பான இயக்குர் மற்றும் வசனகர்த்தா என்பதால்தான் இந்தப் படத்தை அவருக்கு தனுஷ் கொடுத்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக தனுஷ் மிகப்பெரிய மெனக்கெடலை செய்துள்ளதாகவும் படத்தில் இலங்கையே சேர்ந்த போராளியாக அவர் நடித்துள்ளதாகவும் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்த்து அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்வதாக படம் அமைந்துள்ளதாகவும் தனஞ்செயன் மேலும் குறிப்பிட்டுள்ளார். படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக அமைந்துள்ளதாகவும் மிகச்சிறந்த அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











