விஜய்க்கும் ரெட் ஜெயண்டுக்கும் என்ன பிரச்சனை.. தூண்டிவிட்டது யாரு? தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி!
சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாக அரசியல் அழுத்தம் தான் காரணம் என்று தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லியோ இசை வெளியீட்டு விழா: இந்நிலையில்,தயாரிப்பாளர் தனஞ்செயன் லியோ இசைவெளியீட்டு விழா ரத்து குறித்து பேசினார். அதில், லியோ படத்திற்காக மட்டும் இல்லை விஜய்யை நேரடியாக பார்க்கணும், இதற்கு முக்கிய காரணம் விஜய் அவ்வளவு சீக்கிரம் பொதுஇடத்திற்கு வரமாட்டார். ரொம்ப ரேராதான் வருகிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி வந்து விஜய் மக்கள் இயக்கமாக மாறிவிட்டது. இதனால், விஜய் பேசக்கூடிய நிகழ்வா, கருத்துக்களை சொல்லக்கூடிய நிகழ்வாக இருப்பது இசைவெளியீட்டு விழா மட்டும் தான். இதை டிவியிலும், சோஷியல் மீடியாவிலும் பார்க்க வேண்டும் என்று நினைத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் டென்ஷனாகி விட்டார்கள்.
சர்ச்சை: ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் ரசிகர்களிடம் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல, இதனால் நடக்கல, அதனால் நடக்கவில்லை என்று தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் விஜய் விருப்பவே மாட்டாரு. ஏன் என்றால், இசைவெளியீட்டு விழா ரத்தாக எந்த காரணமும் இல்லை.

ரத்தாக காரணம் இதுதான்: விஜய் மாதிரி ஒரு ஆளுமை உள்ள நபரை நேரு ஸ்டேடியம் போன்ற இடத்தில் அடைக்க முடியாது. 5 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே இருக்கக்கூடிய ஒருஇடத்தில், 4 ஆயிரம் இருக்கைகள் ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டால், மீதி இருக்கும் ஆயிரம் விஐபிக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால், எனக்கு பாஸ் வேணும் என்று அனைவரும் கேட்கின்றனர். வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பெரிய பிரச்சனை ஆனது,அந்த இடத்தில் நிற்கக்கூட முடியாத அளவிற்கு கூட்டம் கூடியது.
அரசியல் அழுத்தம் இல்லை: 30ந் தேதி இசைவெளியீட்டுவிழா நடத்தலாம் என்று முடிவு பண்ணிய பிறகு, காவல்துறையிடம் ஆலோசனை நடத்துகிறார்கள். அவர் 6 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் பாஸ் கொடுக்க வேண்டும் ரஹ்மான் இசைவெளியீட்டு விழாவில் நடந்தது போல நடக்கக்கூடாது, இதில் எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் நாங்கள் பொருப்பு இல்லை என்று காவல்துறை தெரிவித்துவிட்டது. அப்படியே நடத்தினால், அது விஜய் மற்றும் படத்தையும் பாதிக்கும் இதனால் இந்த நிகழ்வை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்து ரத்து செய்தார்கள். இதுதான் நடந்ததே தவிர, இதில் அரசியலோ, அரசியல் அழுத்தமோ, ரெட் ஜெயண்ட்டோ,உதயநிதி யாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
தூண்டிவிடுகிறார்: ஆனால் சவுக்குசங்கர் விஜய்க்கும் ரெட் ஜெயண்டுக்கும் பிரச்சனை, அரசியல் அழுத்தம் என்று தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால், ரெட் ஜெயண்டுக்கும் முன்னாடியே சொல்லிவிட்டது எங்களுக்கும் லியோவிற்கும் சம்மந்தம் இல்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











