இது கடினமான நேரம்… ஆனால், இதுவும் கடந்து போகும்… பிரபல தயாரிப்பாளர் ட்விட் !
சென்னை : தயாரிப்பாளர் தனஞ்செயன் கொரோனா 3வது அலை மிகவும் சவாலானதாகவும் கடினமாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கொரோனாவின் அதிவேக தாக்குதலிருந்து தப்பித்துக்கொள்ள மாநில அரசுகள் பல வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் ழுமு ஊரடங்கு பிறக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இது கடினமான நேரம்
இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டு அண்மையில் குணமடைந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை மிகவும் சவாலாகவும் கடினமாகவும் இருக்கும் என்றும், இது கடினமான நேரம் என்றும், ஆனால், இதுவும் கடந்து போகும் என்றும் கூறினார்.

சோர்வாக உள்ளது
கொரோனா நோய் பாதிப்பு வேதனையான ஒன்று என்றும் 7 முதல் 10 நாட்கள் உடலில் மொத்த ஆற்றலையும் எடுத்துவிட்டது. 9 நாட்கள் சிகிச்சையை முடித்துவிட்டு இன்று தான் மீண்டும் வேலைக்குச் செல்கிறேன். ஆனால், இன்னும், சோர்வு உள்ளது. எப்போதும் முகமூடி அணியுங்கள், உங்கள் உடலை கவனித்துக்கொள்ளுங்கள், கோவிட் நோயை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

இதுவும் கடந்த போகும்
விஜய் ஆண்டனி நடித்து வரும், மழை பிடிக்காத மனிதன் படத்தை தயாரித்து வருகிறேன். கொரோனா எங்களை தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பாதித்துள்ளது என்று கூறினார். இதுவும் கடந்து போகும் , வெல்வோம் என தயாரிப்பாளர் தனச்செயன் கூறியுள்ளார்.

விரக்தியில்
கொரோனாவின் மூன்றாவது தீவிரமாவதால் விரக்தி அடைந்த நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும் எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும் என உச்சகட்ட விரக்தியில் பகிர்ந்து இருந்தார்


Click it and Unblock the Notifications











