லியோ விழா நல்ல வேளை ரத்தாச்சு.. இல்லனா அசம்பாவிதம் நடந்து இருக்கும்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

சென்னை: லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்தது நல்ல முடிவு தான் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இப்படம் அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Producer Dhananjayan tweeted about the cancellation of Leo audio launch

லோகேஷ் கனகராஜின் லியோ: மாநகரம்,கைதி, மாஸ்டர்,விக்ரம் என மாஸ் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இரண்டாவது முறையாக லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இருந்து முதல் பாடலான 'நான் ரெடி தான் வரவா' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் விஜய் அரசியிலுக்கு வர இருப்பதை குறிப்பாக கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இசைவெளியீட்டு விழா: இதனிடையே, லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் மாநாடு: இதனால், செப்டம்பர் 30ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த விழா விஜய் அரசியல் மாநாடு போல இருக்கும் என்றும், காக்கா பருந்து கதை சொன்ன ரஜினிக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இசைவெளியீட்டு விழா ரத்து: ஆனால், தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது ட்விட்டர் பக்கத்தில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தள்ளோம் என அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விவேகமான முடிவு: இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு வெறும் 6000 பேர் வரலாம் என்று மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அதிக கூட்டம் வந்து எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும், அதனால் படக்குழுவுக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். அதனால் விழாவை ரத்து செய்தது விவேகமான முடிவு என அவர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X