Dhananjayan: கல்கி 2898 AD படம் மாதிரியே கங்குவா படத்திலும்.. இயக்குநர் தனஞ்செயன் ஓபன்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ள கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த படம் சூர்யா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

முன்னதாக படத்தின் டைட்டில் பிரமோ, டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மிரட்டிய நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அளவில் 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

Suriya Kanguva movie Siva Dhananjayan tamil cinema

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம் கங்குவா. இந்த படம் தீபாவளியையொட்டி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக படத்தின் டீசர், போஸ்டர்கள் என அடுத்தடுத்து வெளியாகி மிரட்டிய நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. சூர்யா கேரியரிலேயே மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சிவா டைரக்ட் செய்துள்ளார்.

10 மொழிகளில் ரிலீஸ்: கமர்சியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவா முதல் முறையாக சூர்யாவின் கங்குவா படத்தை வரலாற்றுப் பின்னணியில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பத்திற்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா தோன்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து கோவா, சென்னை கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் என எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் இந்திய அளவில் 10 முன்னணி மொழிகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

முதல் முயற்சி: முதல் முறையாக இவ்வாறு 10 முன்னணி இந்திய மொழிகளில் வெளியாகும் படம் கங்குவா என்றும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் படம் ஓடிடியில் 30 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், கல்கி 2898 ஏடி படத்தை போலவே கங்குவா படத்திலும் மிரட்டலான பல காட்சிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாகவும் தனஞ்செயன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Suriya Kanguva movie Siva Dhananjayan tamil cinema

சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி: அடுத்ததாக சூர்யா, கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 43 படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படம் அந்தமானில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் அந்தமான் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு உதகையில் இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை பட குழுவினர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X