Kanguva movie: தியேட்டர்ல 10.. ஓடிடியில் 20.. கங்குவா அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளன. இந்தப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த படத்தின் டப்பிங் இன்னும் பத்து நாட்களில் நிறைவடைய உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சூர்யா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா படம். அவரது அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்து வரும் சூழலில் இந்த படம் எப்படிப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. மேலும் பாலிவுட்டிலும் கர்ணா படத்தில் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார்/ அவரது சூறரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம் படங்கள் சிறப்பாக கை கொடுத்த சூழலில் அடுத்ததாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சர்வதேச அளவில் 10 மொழிகளில் படம் ரிலீசாக உள்ள சூழலில் அவற்றிற்கான அடுத்தடுத்த பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
10 மொழிகளில் வெளியாகும் கங்குவா: இந்நிலையில் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் ஓடிடியில் 20 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒட்டுமொத்த டப்பிங் வேலைகளும் இன்னும் 10 நாட்களில் நிறைவடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சமரசம் செய்யாத சிவா: கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள், பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்ட சூழலில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மேக்கிங்கில் எந்த சமரசமும் இல்லாமல் சிவா, அடுத்தடுத்து பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் எந்த அவசரமும் இல்லாமல் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் நோக்கத்தில் உருவாகிவருவதாகவும் முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டிருந்தது.
விரைவில் ரிலீஸ் அப்டேட்: இந்நிலையில் மற்ற மொழிகளின் வெளியீட்டாளர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவுள்ளதாகவும் தனஞ்செயன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில், அதில் முதலையின் கண் மிரட்டலாக காட்டப்பட்டிருந்தது குறித்தும் தனஞ்செயன் பேசியுள்ளார். இந்தக் காட்சி மிகவும் அற்புதமாக வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காட்சிகளை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று சிவா நம்பிக்கை தெரிவித்ததாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











