புதுமை விரும்பிகளுக்கு ஜாங்கோ படம் ரொம்ப பிடிக்கும்... பிரபல தயாரிப்பாளர் உற்சாகம்
சென்னை : சதீஷ்குமார், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடிப்பில் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜாங்கோ.
டைம் லூப் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மனோ கார்த்திகேயன்.
இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் படத்தின் மேக்கிங்கை பெரிதும் பாராட்டியுள்ளார்.

ஜாங்கோ படம்
அறிமுக நடிகர் சதீஷ்குமார், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜாங்கோ படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

மனோ கார்த்திகேயன் இயக்கம்
படத்தை மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். சிவி குமார் தயாரித்துள்ளார். படத்தில் மேலும் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, வேலு பிரபாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் படம் இது என கூறப்பட்டுள்ளது.

சவாலான படம்
முன்னதாக இத்தகைய பாணியில் படத்தை எடுத்தது மிகவும் சவாலாக இருந்ததாக படத்தின் இயக்குநர் மனோ கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். அறிவியல் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் கூறியுள்ளார்.

நிவாஸ் பிரசன்னா இசை
டைரக்டர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் ஆகியுள்ளார். படத்திறகு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகியுள்ள நிலையில் இவரது இசை படத்தில் கவனம் பெற்றுள்ளது.

பிரபலங்கள் பாராட்டு
குறிப்பிட்ட ஒரு நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் அது வித்தியாசமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டு
குறிப்பாக பிரபல தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் படத்தை பார்த்துவிட்டு தான் மிகவும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதுமை விரும்பிகளுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் அவரது வீடியோவை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











