Director Adhik Ravichandran: அஜித் கூட்டணியை முன்னதாகவே கணித்த தயாரிப்பாளர்.. உணர்ச்சிவசப்பட்ட ஆதிக்

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதத்தில் அஜித் தன்னுடைய ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இவர் முன்னதாக அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். நடிப்பு, இயக்கம் என பிசியாக உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மார்க் ஆண்டனி என்ற டைம் டிராவல் படத்தை சமீபத்தில் கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்தே அடுத்ததாக அஜித்தின் ஏகே63 படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்துள்ளது. இதன் முன்தயாரிப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார் ஆதிக். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராகவும் உள்ள நிலையில், ஏகே63 படம் மிகச்சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்க்கலாம்.

Producer Dhananjayan wished Adhik Ravichandran to direct Ajith after Mark antony movie

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஏறக்குறைய அசர்பைஜானிலேயே எடுத்து முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டு அதன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அசர்பைஜானின் பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் காட்சிகளில் அஜித், அர்ஜூன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

விடாமுயற்சி படம்: இந்நிலையில் அடுத்ததாக சிறிய அளவில் செட்கள் அமைத்து அஜித், திரிஷா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி 3ம் வாரத்திற்குள் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு மார்ச் மாதத்தில் ஏகே63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஆதிக் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: முன்னதாக மார்க் ஆண்டனி என்ற டைம் டிராவல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அவரது முந்தைய படங்கள் எதுவும் சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது, தன்னுடைய பார்வையை மாற்ற அஜித் அறிவுறுத்தியதாகவும் அதுவே தன்னை மார்க் ஆண்டனி போன்ற படத்தை இயக்க உத்வேகப்படுத்தியதாகவும் முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். தான் அஜித்தின் மிகபெரிய ரசிகர் என்பதையும் அவர் உற்சாகமாக வெளிப்படுத்தியிருந்தார்.

அஜித்தை இயக்கும் வாய்ப்பு: தனக்கு மிகவும் பிடித்தமான அஜித்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், மார்க் ஆண்டனி படத்தை பார்த்து ஆதிக்கை தான் பாராட்டியதாகவும் அவரது குருவான அஜித்தை இயக்குவதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய திருமணத்தின்போது தனக்கு கால் செய்த ஆதிக், அஜித்தை இயக்குவது குறித்து தான் கூறியது நடக்கவுள்ளதாகவும் இதற்குமேல் இதுகுறித்து பேச முடியாது என்றும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்ததையும் தனஞ்செயன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அஜித் -ஆதிக் காம்பினேஷன்: மார்ச் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ள ஏகே63 படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி, ஆக்ஷன் என ஏகே63 படத்தை சிறப்பாக கொடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அஜித்துடனான படம் அவரது கேரியரில் பெஸ்ட்டான தருணங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X