எதற்கும் வருத்தப்பட வேண்டாம்.. பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.. கங்குவா டீமுக்கு தயாரிப்பாளர் அட்வைஸ்?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

kanguva suriya vettaiyan


என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனம்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். மேலும் ட்ரெய்லரில் பாகுபலி வாடை ஹெவியாக அடிப்பதாகவும்; இதிலும் சிவா சொதப்பிவிடுவாரோ என்று கூறினர். ஆனால் ட்ரெய்லர் பட்டையை கிளப்புகிறது என்றும் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

வேட்டையனுடன் மோதும் கங்குவா: இதற்கிடையே படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அன்றைய தினம் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படமும் ரிலீஸாகிறது. எனவே ரஜினியுடன் மோதுவது சரியாக இருக்குமா என்று எண்ணம் முதலில் படக்குழுவுக்கு தோன்றியதாகவும்; இப்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும் சமீபமாக சில தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

தனஞ்ஜெயன் அட்வைஸ்: இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உங்கள் வாழ்க்கையில் நடந்த எதற்கும் வருத்தப்பட வேண்டாம். அதை மாற்றவோ, தவிர்க்கவோ அல்லது மறக்கவோ முடியாது. எனவே கற்றுக்கொண்ட பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதன் மூலம் தனஞ்ஜெயன் யாருக்கு அட்வைஸ் செய்கிறார். ஒருவேளை வேட்டையனுடன் மோதுவதை தவிர்க்க வேண்டாம். ஒருவேளை தவிர்த்தாலும் அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கங்குவா டீமுக்கு சூசகமாக சொல்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X