அஜித்தும் தனுஷும் இணைகிறார்களா?.. வாய்ப்பே இல்லை பாஸ்.. ஓபனாக போட்டுடைத்த தயாரிப்பாளர்

சென்னை: அஜித்தின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் வாருங்கள் என்று ரசிகர்களிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டாலும்; ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு சென்று ஏமாந்துபோனார்கள். அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் அஜித்தை தனுஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தன.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார். மகிழின் சொந்தக் கதையில் நடிக்காமல் பிரேக் டவுன் என்கிற படத்தின் ரீமேக்கில் நடித்தார். இதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன்களிலேயே விடாமுயற்சி மீது அதீத எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு வர வேண்டாம் என்று இயக்குநர் கூறிவிட்டார். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படம் ரிலீஸ் என்பதால் அவரது ரசிகர்கள் ஹைப்போடுதான் தியேட்டருக்குள் சென்றார்கள்.

ஏமாந்துபோன ரசிகர்கள்: அந்த ஹைப்போடு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அஜித் என்றாலே ஆக்‌ஷன் என்று அர்த்தமாகிவிட்டது கடந்த சில வருடங்களாக. ஆனால் விடாமுயற்சியிலோ அந்த அளவுக்கு அஜித்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளும், மாஸ் காட்சிகளும் இல்லை. அதேசமயம் இப்படிப்பட்ட ஒரு டாப் ஹீரோ தனது இமேஜை எல்லாம் உடைத்துக்கொண்டு இந்த மாதிரி ஷட்டிலாக கதைக்கு தேவைப்படும்படி நடித்தது திரை ஆர்வலர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Producer Dhananjeyan Talks about Ajith Dhanush Combo

குட் பேட் அக்லி: அடுத்ததாக அவரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் டீசர் சமீபத்தில்தான் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றன. டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அஜித்தை அவ்வளவு மாஸாக காண்பித்திருக்கிறார் இயக்குநர். ஆதிக் அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் தரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும்; விடாமுயற்சியில் விட்டதை இதில் பிடித்துவிடலாம் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள்.

விரைவில் சிங்கிள்: டீசரில் பில்லா, வேதாளம், வாலி உள்ளிட்ட படங்களின் ரெஃபரென்ஸ் எல்லாம் இடம்பெற்றிருந்தன. எனவே நிச்சயம் குட் பேட் அக்லி தங்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கிடையே டீசரில் இடம்பெற்றிருக்கும் இசையும் பட்டையை கிளப்பியது. ஜிவி பிரகாஷ் இசையில் பிஜிஎம்மும் பட்டாசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவியும் தனது எக்ஸ் தளத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வரும் என்றும்; சுட சுட தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

Producer Dhananjeyan Talks about Ajith Dhanush Combo

தனுஷுடன் கூட்டணி?: குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; தனுஷின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் பேசுகையில், "தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்பதுவ் எறும் வதந்திதான். அஜித்தை வைத்து இயக்குவதற்கு பல இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

அநேகமாக அஜித்தின் 64ஆவது படத்தை ஆதிக்தான் இயக்குவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதேபோல் விஷ்ணுவர்தன், சிவா, கார்த்திக் சுப்புராஜ் என பலர் அஜித்திடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார்கள். மறுபக்கம் தனுஷிடம் ஐந்து படங்களுக்கும் மேல் இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் அஜித்தும், தனுஷும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X