சிவகார்த்திகேயனுக்கும் சுதா கொங்கராவுக்கும் மோதலா?.. அவர்களே சிரித்தார்கள்.. தனஞ்ஜெயன் விளக்கம்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் மீதுமே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. முக்கியமாக புறநானூறு திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிக்கவிருந்தார். ஆனால் சில பிரச்னைகளால் அந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்தியேன் தான் இப்போது கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். ஏனெனில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. தியேட்டரில் பெற்ற ரெஸ்பான்ஸை போலவே ஓடிடியிலும் அந்தப் படத்துக்கு சூப்பர் டூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றியால் எஸ்கேவின் சம்பளமும் உயர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

sivakarthikeyan sudha kongara


புறநானூறு கமிட்டட்: இதற்கிடையே சூரரைப் போற்று படத்தை இயக்கி தேசிய விருது வென்ற சுதா கொங்கரா; அடுத்ததாக சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்க கமிட்டானார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. மீண்டும் தேசிய விருது கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படத்திலும் தரமான சம்பவம் இருக்கும் என்று சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவகையில் சூர்யா அதிலிருந்து வெளியேறினார்.

என்ன காரணம்: சூர்யாவுக்கும், சுதா கொங்கராவுக்கும் இடையே நடந்த பிரச்னைதான் இதற்கு காரணம் என்று பலரும் சொன்னார்கள். மேலும் ஜோதிகா இந்தக் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும்; அதற்கு சுதா ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டான சூர்யா புறநானூறைவிடவும் அப்படத்தில் நடிப்பதற்குதான் ஆர்வம் காட்டினார். இது சுதாவுக்கு பிடிக்காததால் வெளியே வந்துவிட்டார் என்றும் ஒரு தகவல் உண்டு.

சிவகார்த்திகேயன் இன்: சூர்யா படத்திலிருந்து வெளியேறிய பிறகு சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார். மேலும் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமீபத்தில் எஸ்கேவுக்கும், சுதாவுக்கும் மோதல் வந்துவிட்டதாக ஒரு தகவல் தீயாக பரவி அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விளக்கமளித்திருக்கிறார்.

தனஞ்ஜெயன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், “புறநானூறு படத்தின் ஷூட்டிங்கில் சிவாவுக்கும், சுதாவுக்கும் மோதல் என்று கேள்விப்பட்டதும் நானே படத்துக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் ஃபோன் செய்து பேசினேன். இதுதொடர்பாக கேட்ட பிறகு அவர்களே சிரித்துவிட்டார்கள். ஒரு மோதலும் இல்லை. அனைத்தும் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கின்றன. மோதல் என்று வந்ததெல்லாம் வதந்தி மட்டும்தான். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாக சொன்னார்கள்.

வழக்கமானதுதான்: ஒரு மிகப்பெரிய படத்தை உருவாக்கும்போது; சுதா கொங்கரா போன்ற ஒரு தேசிய விருது வென்ற இயக்குநர்; கடுமையாக உழைக்கக்கூடிய இயக்குநரின் அடுத்த படைப்பு தொடங்கும்போது இதுபோன்ற சிறு சிறு பிரச்னைகள் வரவிருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வெளியே சொல்வது இந்த மோதல் எல்லாம் நடக்கவே இல்லை” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X