Vidaamuyarchi - விடாமுயற்சி யாருடைய படமாக இருக்கும்?.. தயாரிப்பாளர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

துணிவு படத்தில் அஜித் கடைசியாக நடித்தார். வங்கிக்கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து கமர்ஷியலாக பேசியிருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றது. வசூலும் 300 கோடி ரூபாயை தாண்டியதாக படத்தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. துணிவு படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். லைகா தயாரிப்பில் முதலில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது.

விடாமுயற்சி: ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாம் பாதியில் தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லாததால் விக்னேஷ் சிவன் வெளியேறி மகிழ் திருமேனி உள்ளே வந்தார். தடம், தடையறத்தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் என்பதால் அஜித்துடன் இணையும் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Producer Dhananjeyan talks about Vidaamuyarchi Movie

எப்போது ஷூட்டிங்?: படத்தின் பெயருக்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் மகிழ் திருமேனி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும், ஜூலை மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் பட ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. இதற்கிடையே லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனையும் நடந்தது. அதுவும் விடாமுயற்சி ஷூட்டிங் தாமதத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

லொகேஷன் தேர்வு?: படத்தின் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஒரு தகவல் வெளியானது. இந்தச் சூழலில் லொகேஷன் தேர்வு செய்வதற்காக இயக்குநர் மகிழ் திருமேனியும், அஜித்தும் இப்போது வெளிநாட்டு ட்ரிப்பில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு கேட்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

தனஞ்ஜெயன் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எப்போதுமே நீங்கள் ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் பண்ணும்போது அது பெரிய ஸ்டாரின் படம்தான்.. அது இயக்குனர் மகிழ் திருமேனியி ட்ரீட்மெண்டில் இருக்கும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது அல்லவா.. அவருடைய ஸ்டைலில் அஜித்குமாரின் படமாக இருக்கும். முழுக்க முழுக்க அஜித் படமாகவோ இல்லை மகிழ் படமாகவோ இருக்காது. கட்டாயம் இது அஜித்துக்கான ட்ரிபியூட்டாக இருக்கும். அதை மகிழ் திருமேனி அவரது ஸ்டைலில் கொடுப்பார்.

நம்பிக்கை உண்டு: எனக்கு மகிழ் திருமேனியின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நான் இணைந்து பணியாற்ற விரும்பும் சில இயக்குநர்களில் அவரும் ஒருவர். அவருடைய கலகத் தலைவன் திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பு அவருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதற்காக ஒரு ஹீரோவிடம் எல்லாம் பேசி அந்த ஹீரோவும் ஏற்றுக்கொண்டார்.

அதற்காக அந்த ஹீரோவிடம் போய் கதை சொல்லலாம் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். பின்னர் கலகத் தலைவன் படத்தில் ரிலீஸுக்கு பிறகு எனக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுங்கள் நான் இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என கேட்டிருந்தார். அதற்குள் அவருக்கு அஜித் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X