தளபதி 69 அப்டேட்.. விஜய் ரசிகர்களுக்கு நல்ல செய்தி.. தயாரிப்பாளர் பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. இந்தச் சூழலில் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 குறித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Vijay Thalapathy 69 Dhananjeyan 69

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகிறது.

தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

கடைசி படம்: விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை வெற்றிமாறன், அட்லீ, ஆகிய இரண்டு பேரில் ஒருவர் இயக்குவார் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஓடியது. அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி பெயர்கள் அடிபட்ட சூழலில் இப்போது ஹெச்.வினோத் பெயர் அடிபடுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனஞ்ஜெயன் பேட்டி: இதற்கிடையே தளபதி 69 படம் ட்ராப்பாகிவிட்டதாக கடந்த சில நாட்களாகவே தகவல் ஓடியது. இதனால் விஜய் ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தளபதி 69 குறித்து சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "GOAT படத்துக்கு பிறகு தளபதி 69ல் விஜய் கண்டிப்பாக நடிப்பார். அதன் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் ஆரம்பமாகும். அடுத்த ஆண்டு ஏப்ரல்வரை விஜய் சினிமாவில்தான் இருப்பார். பிறகுதான் அரசியலில் என்ட்ரி கொடுப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X