தமிழ்நாடு திராவிட நாடுப்பா.. அதுக்கு இடமே இல்லை.. பாஜக ஆதரவாளருக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை வீழ்த்துவோம் என பாஜகவினர் ஏகப்பட்ட பில்டப்புகள் செய்து வந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து தங்கள் கடுமையான எதிர்ப்பையும் பாஜகவுக்கு ஒருபோதும் ஆதரவு தர மாட்டோம் என்கிற நிலைப்பாட்டையும் வலிமையாக வலியுறுத்தி வருகின்றனர்.
சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகராக வலம் வந்த இன்ஃப்ளூயன்சர் கார்த்திக் ரவிவர்மா திடீரென தேர்தல் நேரத்தில் ஹெவியாக பாஜகவுக்கு புரமோஷன் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை பரிதாபகர நிலைக்கு செல்வதை அறிந்துக் கொண்ட அவர் திடீரென கிரிகாலன் மேஜிக் ஷோ நடத்தும் வடிவேலுவின் வீடியோவை எல்லாம் போட்டு தனது ரசிகர்களை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அதை பார்த்த தயாரிப்பாளர் தனஞ்செயன் தற்போது பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.

பாஜக பெரும் சரிவு: நாடு முழுவதுமே பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு இருப்பது இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதை பார்த்தாலே தெரிகிறது. குறைந்த சதவீதத்திலேயே பல இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. பெரிதாக எந்தவொரு இடத்திலும் பாஜக தலை தூக்கவே இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக காட்டிய கெத்தெல்லாம் தற்போது அவரே பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தூள் தூளாக நொறுங்கி விட்டது.
அங்க பார்த்துட்டு இங்க பார்க்குறாங்களே: சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான கார்த்திக் ரவிவர்மா கடந்த சில மாதங்களாக பாஜக கட்சிக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை பரிதாப இடத்துக்கு சென்றிருப்பதை பார்த்து விட்டு வடிவேலுவின் கிரிகாலன் மேஜிக் காமெடியை ஷேர் செய்துள்ளார். .3 பேர் இருந்தாலே அடிப்பாய்ங்க, 300 பேர் கிட்ட கோர்த்து விட்டு போயிட்டானே என்றும் அங்க பார்த்துட்டு அப்படியே நம்ம பக்கம் திரும்புறாங்களே என தனது மனக் குறைகளை கொட்டித் தீர்த்துள்ளார்.
புதுப்பேட்டை சீன்: புதுப்பேட்டை படத்தில் தனுஷ் தன்னை போடுவதற்கு ஊரே வரப்போகுது என பயந்து நடுங்கும் காட்சியையும் வெளியிட்டுள்ளார் கார்த்திக் ரவிவர்மா. அந்த வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
தனஞ்செயன் ட்வீட்: தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்செயன் தொடர்ந்து கங்குவா படத்தின் அப்டேட்களை யூடியூப் பேட்டிகளில் சொல்லி வரும் நிலையில், கார்த்திக் ரவிவர்மாவின் ட்வீட்டை பார்த்து விட்டு அவரை கலாய்த்துள்ளார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆன்லைனில் ஆதரவாக இருந்து விட்டு தற்போது தோல்வியை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வதற்காக உனக்கு பாராட்டுக்கள் தம்பி என சொல்லிவிட்டு தனஞ்செயன், தமிழ்நாடு திராவிட நாடுப்பா, இங்கே மதத்தை கொண்டு வந்து அரசியல் செய்தால் நிச்சயம் பலனளிக்காது என ஒரே போடாக போட்டுள்ளார். அதெல்லாம் இருக்கட்டும் தங்கலான், கங்குவா ரிலீஸ் அப்டேட் கொடுங்க என ரசிகர்கள் அவரை லாக் செய்துள்ளனர்.
தாத்தா வராரு: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் போட்ட தாத்தா வராரு கதற விட போறாரு பாடலை மோடிக்கு எடிட் செய்து கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் பாஜகவின் ஐடி விங் மற்றும் ஆதரவாளர்கள் ஷேர் செய்து வந்த நிலையில், தற்போது கதறுவது யார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











