ரீல்ஸ் வெறி கொண்ட பெண்கள் ஆண்களை கொன்றுவிடுவார்கள்.. தனஞ்செயன் போட்ட திடீர் போஸ்ட்!
சென்னை: சமூக வலைதள மோகம் மக்களை நாளுக்கு நாள் அதிகமாகவே ஆட்கொண்டு வருகிறது. சிலர் லைக்குகளுக்காக பல கோமாளித் தனங்களைச் செய்வதும், சிலர் உயிருக்கே ஆபத்தான விஷயங்களைச் செய்வதும், தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இப்படி இருக்கையில் கேரளாவில் ஷிம்ஜிதா என்ற பெண் தான் பேருந்தில் பயணம் செய்த போது தீபக் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பது போன்ற வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ பெருமளவுக்கு வேகமாக பரவியது. இதற்கு முன்னர் பேருந்து பயணத்தின் போது சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்ற பல வீடியோக்கள் வந்துள்ளது. அவற்றுக்கு சம்பந்தப்பட்ட பெண்கள் சம்பவ இடத்திலேயே தர்ம அடி கொடுத்தும் உள்ளார்கள். உடனே காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ஷிம்ஜிதா விவகாரத்தில் புகாரோ, அடி உதையோ போன்ற எந்த சம்பவங்களும் இல்லை. இந்த வீடியோ வைரலான போது தீபக் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ( தற்கொலை தவறான செயல்; தற்கொலை எதற்கும் தீர்வல்ல) மேலும் அந்த வீடியோவில் தீபக் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டது போன்று தெரியவில்லை என்றும், பேருந்தின் நகர்விலும் அசைவிலும் அவரது உடல் அசைகிறதே தவிர, அவரிடத்தில் உள்நோக்கம் இல்லை என்று பலரும் பதிவிட்டனர்.
கேரளா காவல்துறை: தீபக்கின் மறைவு இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியது. மேலும் வீடியோவை பதிவிட்ட ஷிம்ஜிதாவை கேரளா காவல்துறை கைது செய்தது. ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதும், பலரும் கேரளா காவல்துறையை பாராட்டத் தொடங்கினர். மேலும் ஷிம்ஜிதாவின் சமூக வலைதள மோகம் ஒரு உயிரைப் பறித்து விட்டது என்றும் பதிவிட்டனர்.

ஆண்களைக் கொல்லும் பெணகள்: இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது," இது போன்ற பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற அந்த பெண்ணைக் கைது செய்த கேரள காவல்துறைக்கு நன்றி. கேரளா காவல்துறையின் செயல் பல மாநில காவல்துறைக்கு ஒரு முன் உதாரணம். இது போன்ற ரீல்ஸ் மோகமுள்ள பெண்கள் எதிர்காலத்தில் அப்பாவி ஆண்களைக் கொன்று விடுவார்கள். தீபக்கிறகு நடந்த அநீதியைப் பார்த்து, அநீதிக்காக எதிர்த்துப் போராடிய Men Right Foundation - க்கு பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











