காலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு
காலா படம் உலகம் முழுக்க ஜூன் 7ம் தேதி வெளியாகிறது.
Recommended Video

சென்னை: காலா படம் உலகம் முழுக்க ஜூன் 7ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிறைய நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் இந்த படம் இந்தியா முழுக்க பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக புதிய படங்கள் ரீலீஸ் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஏப்ரல் 27 அன்று ரீலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி நடித்திருக்கும் காலா படத்துக்கு சான்றிதழ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்து வந்தது. இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த போராட்டம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் படங்கள் வெளியாகி வருகிறது.
இதையடுத்து தற்போது காலா படம் உலகம் முழுக்க ஜூன் 7ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் காலா தணிக்கை பெறுவதற்காக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











