நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில்.. பிரபல தயாரிப்பாளர் 2 வது திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து!
ஐதராபாத்: பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
Recommended Video
விநாயக் இயக்கத்தில் 'தில்' தெலுங்குப் படத்தை தயாரித்ததன் மூலம் 'தில்' ராஜு ஆனவர் தயாரிப்பாளர் ராஜு.
தொடர்ந்து ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

தேசிய விருது
இவர் தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. பல விருதுகளையும் குவித்துள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'சதமானம் பவதி' திரைப்படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்வானந்த், பிரகாஷ் ராஜ், அனுபமா பரமேஸ்வரன் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

96 படத்தின் ரீமேக்
அவர் கடைசியாக தமிழில் சூப்பர் ஹிட்டான ‘96' படத்தை ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தார். அவர் தயாரிப்பில் உருவான முதல் ரீமேக் படம் இது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. 49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார். பிறகு, திருமணம் குறித்த எண்ணமில்லாமல் இருந்த அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாரானார்.

கோயிலில் திருமணம்
கடந்த சில நாட்களாக இவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தில்ராஜூவுக்கும், தேஜஸ்வினி என்பவருக்கும் நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடந்தது.

புகைப்படங்கள்
லாக்டவுன் காரணமாக இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண ஏற்பாடுகளை தில் ராஜூவின் மகள் ஹர்ஷிதா ரெட்டி கவனித்துக் கொண்டார். இதையடுத்து மணமக்களுக்கு சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











