நள்ளிரவில் இரண்டாவது திருமணம்.. பிரபல தயாரிப்பாளரின் புது முடிவு.. பரபரப்பில் திரையுலகம்!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இன்று இரவு திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Actress Sithara Shocking secret on her Marriage | South Film Actress | Padayappa

2003ம் ஆண்டு இயக்குநர் விநாயக் இயக்கத்தில் வெளியான தில் படத்தை தயாரித்ததன் மூலம் ராஜுவாக இருந்தவர் தில் ராஜுவாக சினிமா உலகில் பிரபலமானார்.

தில், ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. விருது விழாக்களில் பல விருதுகளையும் குவித்துள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'சதமானம் பவதி' திரைப்படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்வானந்த், பிரகாஷ் ராஜ், அனுபமா பரமேஸ்வரன் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

மனைவியின் மரணம்

மனைவியின் மரணம்

49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதற்கு பிறகு, திருமணம் குறித்த எண்ணத்தில் இல்லாமல் இருந்த தில் ராஜு தற்போது தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். கடைசியாக தில் ராஜு தயாரிப்பில் 96 படத்தின் ரீமேக்கான ஜானு ரிலீசாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் திருமணம்

நள்ளிரவில் திருமணம்

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர் தில் ராஜு இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிஜாமாபாத்தில் உள்ள குடும்ப கோயில் ஒன்றில் நள்ளிரவு தாலி கட்ட முடிவு செய்துள்ளாராம் தில் ராஜு.

திருமணத்திற்கு தயார்

திருமணத்திற்கு தயார்

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் தில் ராஜு, தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், திருமண வாழ்க்கை இந்த இக்கட்டான நேரத்தையும் சந்தோஷமான நேரமாக மாற்றும் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வக்கீல் சாப்

வக்கீல் சாப்

சுமார் 10 பேர் மட்டுமே தில் ராஜுவின் இரண்டாவது திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிங்க் படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தை தயாரித்துள்ளார் தில் ராஜு. மே மாதம் ரிலீசாகி இருக்க வேண்டிய பவன் கல்யாணின் அந்த படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X