சரியான அடிகொடுத்த கேம் சேஞ்சர்.. அடுத்த கூட்டணியை பலமாக திட்டமிடும் தில் ராஜு.. சூப்பரப்பு!
ஐதராபாத்: நடிகர் ராம்சரண், கியாரா ஆத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த பொங்கலையொட்டி வெளியான கேம் சேஞ்சர் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர். கடந்த ஆண்டில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மிகப்பெரிய பிளாப்பான நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.
ஆனால் இந்த படமும் ஷங்கருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் கேம் சேஞ்சர் படம் 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த படத்தின் கூட்டணியை மிக பலமாக யோசித்து வருகிறார் தில் ராஜு. முன்னணி இயக்குநருடன் களமிறங்கவுள்ளார்.

கேம் சேஞ்சர் படம்: கேம் சேஞ்சர் படம்: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பொங்கலையொட்டி வெளியான கேம் சேஞ்சர் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர். 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படத்தில் எந்தவிதமான கதைக்களமும் இல்லை என்றும் பிரம்மாண்டமும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். படம் மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது. இந்தப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கைக்கொடுத்த வெங்கடேஷ் படம்: இந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியான படங்களிலேயே கேம் சேஞ்சர்தான் மிகப்பெரிய தோல்வியை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் கை கொடுக்கவில்லை என்றாலும் அதே நாளில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சங்கராந்திக்கு வஸ்துனாம் படம் தில்ராஜு தயாரிப்பிலேயே வெளியானது. இந்த படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது. படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தில் ராஜுவிற்கு இந்த படம் மூலம் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேம் சேஞ்சரில் விட்ட லாபத்தை இந்தப் படத்தில் பிடித்து விட்டார் தில் ராஜு.
அதிரடி திட்டத்தில் தில் ராஜு: ஆனாலும் கேம் சேஞ்சர் படம் கொடுத்த இழப்பிலிருந்து மீண்டு வர தில் ராஜ் அடுத்த படத்தை மிக பலமான கூட்டணியுடன் திட்டமிடுவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் தில் ராஜு இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் உறுதியானால், படத்தை 2027ம் ஆண்டில் ரிலீஸ் செய்யவும் தில் ராஜு திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோ குறித்தும் விரைவில் படக்குழுவினர் அப்டேட் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பிரஷாந்த் நீல்: யஷ் லீட்கேரக்டரில் நடித்து கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்களை இயக்கியிருந்தார் பிரஷாந்ந் நீல். இந்தப் படங்கள் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த நிலையில், அடுத்ததாக பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடிக்க சலார் படத்தை கொடுத்திருந்தார். ஆனால் இந்தப் படம் முந்தைய படங்களை போல வரவேற்பை பெறவில்லை. மாறாக 650 கோடி ரூபாய் வரையில் மட்டுமே சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பெற்றது. இதனிடையே, அடுத்ததாக சலார் 2 படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பிரஷாந்த் நீல். கேஜிஎப் படங்கள் கொடுத்த வெற்றியால் சலார் படத்தில் அலட்சியமாக இருந்து விட்டேனோ என்று தோன்றுவதாக அவர் முன்னதாக பேட்டியொன்றில் கூறியுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் கவனமாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











