Dil Raju wife: வங்கி லாக்கரை சோதனையிட்ட ஐடி அதிகாரிகள்.. தில் ராஜு மனைவி பேட்டி!
சென்னை: கேம் சேஞ்சர் மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களின் வீடுகள் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய, தில் ராஜுவின் மனைவி தேஜஸ்வினி, வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ததாக கூறினார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார் . தெலுங்கில் பல வெற்றிப்படத்தை கொடுத்த தில் ராஜு, விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் தில் ராஜுவின் கேம் சேஞ்சர் படம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனத்தால் படம் தோல்வியைத் தழுவியது. அதே போல பொங்கல் பண்டிகைக்கு வெங்கடேஷ், மீனாட்சி சௌத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் அனில் ரவிபுடி தயாரித்த வஸ்துனம் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று, வசூலை அள்ளி வருகிறது.
வங்கி லாக்கரை திறந்து ஆய்வு : இந்நிலையில், இன்று தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி , அலுவலகம் என 8 இடங்களில் வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். தில் ராஜு மட்டுமல்ல, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தினர்.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜுவின் மனைவி தேஜஸ்வினி, அதிகாரிகள் வங்கி லாக்கரை திறந்து ஆய்வு செய்வதற்காக என்னிடம் இருந்து வங்கிலாக்கர் சாவிகளை பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் அறிக்கை தருவார்கள் என்றார். மேலும், இது வழக்கமான ஐடி சோதனை தான். இதற்கு முன்பும் இதுபோன்று ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











