விரைவில்… மரகத நாணயம் 2…. தயாரிப்பாளர் கொடுத்த செம அப்டேட் !

சென்னை : மரகத நாணயம்2 திரைவில் உருவாகும் என்று இயக்குனர் சரவன் கூறியுள்ளார்.

கதைக்கருவை தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறார் அவர் விரைவில் தனது முடிவை தெரிவிப்பார்.

மேலும் அதர்வாவுடன் ஒரு படத்தை இயக்க உள்ளேன் அந்த படத்திற்கு பிறகு மரகத நாணயம் 2 உருவாகும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். இதில், அருண்ராஜா காமராஜ், கோட்டா சீனிவாசராவ், மைம் கோபி, சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்திருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கெட்டவன் தொட்டா செத்தான்

கெட்டவன் தொட்டா செத்தான்

மன்னர் காலத்து விலை மதிக்க முடியாத மரகத நாணயம் ஒன்று கிடைக்கிறது இந்த நாணயத்தை கெட்டவன் தொட்டா அவன் செத்தான் என்ற கருவுடன் அக்ஸஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரித்தார். இப்படத்தைஅறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்தார்.

படத்தை இயக்க உள்ளேன்

படத்தை இயக்க உள்ளேன்

மரகத நாணயம் திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த சரவன் அதர்வா முரளியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது.

விரைவில்

விரைவில்

மரகத நாணயம் 2 திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக இயக்குர் சரவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை தொடங்க உள்ளேன். இவற்றை எல்லாம் விட, கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பேத என் பிரார்த்தனை என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

காடுகளிலும், மலைகளிலும்

காடுகளிலும், மலைகளிலும்

இதையடுத்து தயாரிப்பாளருக்கு கதை பிடித்து போகவே மரகத நாணயம்2 படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மேலும், இரண்டாம் பாகத்தின் கதை காடுகளிலும், மலைகளிலும் நாணயத்தை தேடி செல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X