Varisu - வாரிசு ரிசல்ட்.. விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் பதில்
சென்னை: Varisu Vijay (வாரிசு விஜய்) வாரிசு படத்தின் ரிசல்ட்டுக்கு விஜய் என்ன சொன்னார் என ரசிகர் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் தில்ராஜு பதிலளித்திருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் வாரிசு படத்தில் நடித்தார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் பைலிங்குவலாக அந்தப் படம் உருவானது. படத்தை தெலுங்கில் ஃபேமஸ் தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். கடந்த பொங்கலுக்கு படம் ரிலீஸானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற வாரிசு திரைப்படம்
தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் நோக்கத்தில்தான் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பைலிங்குவல் படமாக வாரிசு படத்தில் நடித்தார் விஜய். எனவே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். இருந்தாலும் படம் பொதுவான ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. குடும்ப செண்ட்டிமெண்ட் என்ற விஷயத்தை வம்சி தொட்டிருந்தாலும் படம் சீரியல்போல் இருந்ததாகவும், திரைக்கதை படு மோசமாக இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே கூறினர். இருந்தாலும் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாரிசு ரிசல்ட்; விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
இருந்தாலும் வாரிசு ரிசல்ட் விஜய்க்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாகவே கூறப்பட்டது. அதுமட்டுமின்றி பீஸ்ட் திரைப்படம் தோல்வி படமாக அமைந்துவிட்டது, வாரிசு படமும் சுமார் படமாக அமைந்துவிட்டது. எனவே அடுத்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்ற தீவிர முனைப்போடுதான் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய் நடித்துவருகிறார் எனவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவிடம் ரசிகர் ஒருவர், "வாரிசு திரைப்படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் என்ன சொன்னார்" என கேட்டிருந்தார். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த தில்ராஜு, 'வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்தும் அது பொங்கல் வின்னராக அமைந்தது குறித்தும் விஜய் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்'என்று ஒற்றை வரியோடு நிறுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டில் யார் நம்பர் 1; பற்ற வைத்த தயாரிப்பாளர் தில்ராஜு
வாரிசு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தில்ராஜு, தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1. எனவே வாரிசு படத்துக்குத்தான் அதிகளவிலான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திடம் கேட்கப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேட்டி அந்த சமயத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும் தில்ராஜுவின் பேச்சு கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதும்; அதை வைத்து ரசிகர்கள் ஒரு பாடலை உருவாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











