தனுஷ் கால்ஷீட் தரல.. அரசியல் குறுக்கீட்டால் நியாயம் கிடைக்கவில்லை.. தயாரிப்பாளர் அறிக்கை!

சென்னை: நடிகர் தனுஷ் முன்பணத்தை வாங்கிக் கொண்டு கால்ஷூட் தராமல் இழுத்து அடிப்பதாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், தற்போது காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் பற்றி பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 6.9.24 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு நடிகர் தனுஷ், அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன். அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures ஆகாஷ் அவர்களின் "இட்லிகடை" படப்பிடிப்பு நடக்கவேண்டும்,"மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ? மேலும் October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்.

Dhanush Kathiresan

இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை: நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொழிலாளர் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில், அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம், October 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று, கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது என

தயாரிப்பாளரின் வலியை புரிந்து கொள்ளுங்கள்: மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே. நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே, எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி இட்லி கடை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிப்போகும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X