அடுத்த சோகம்.. பிரபல தயாரிப்பாளர் ஜி. ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73.

உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா, ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், முரளியின் மனுநீதி மற்றும் சத்யராஜின் சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர்

பழம்பெரும் நடிகர்

ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி கணேசன், சாவித்ரி, கமல் நடிப்பில் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்துள்ள இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ராஜாதி ராஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், எட்டுப்பட்டி ராசா, வீர தாலாட்டு, மனுநீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர்

பிரபல தயாரிப்பாளர்

ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மனுநீதி, சவுண்டு பார்ட்டி, காசு இருக்கணும், காதலி காணவில்லை, எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். கன்னட திரையுலகிலும் இவர் படங்களை தயாரித்து நடித்துள்ளார்.

ஜி. ராமசந்திரன் காலமானார்

ஜி. ராமசந்திரன் காலமானார்

தயாரிப்பாளர் ஜி. ராமசந்திரனின் மனைவி ஆர்.பி. பூரணி சமீபத்தில் தான் மாரடைப்பு காரணமாக காலமானார். மனைவியின் பிரிவால் வாடி வந்த இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று அதி காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மதியம் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்த திரைப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X