நான் ரஜினியின் வேட்டையன் படம் குறித்து பேசவில்லை.. ஜகா வாங்கிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படம் இம்மாதம் 10ம் தேதியே ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸையடுத்து கங்குவா படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேரக்டர் அறிமுகம் மூலம் படத்தின் ஓபனிங்கில் எந்தவித பயனும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு வேட்டையன் படத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

kanguva movie rajinikanth gnanavel raja

கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா அதிரடியாக மிரட்டி உள்ளார். படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். படத்தின் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் இந்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்குவா பட பிரமோஷன்கள்: இந்தப் படத்திற்காக சூர்யாவும் ஒரு மாதத்திற்கு பிரமோஷன்களில் ஈடுபட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழகத்தில் முதல் ஆயிரம் கோடி வசூலை எட்டும் படமாக அமையுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தான் இந்த படம் 2000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார். படம் குறித்து அவரது உச்சகட்ட நம்பிக்கையை அவரது இந்த பேட்டி கொடுத்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் ஞானவேல் ராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வேட்டையன் படத்தை வம்பிழுக்கும்வகையில் பேசியிருந்தார்.

வேட்டையன் குறித்த ஞானவேல் ராஜா கமெண்ட்: கங்குவா படத்தின் கேரக்டர்கள் குறித்த பிரமோஷன்களுக்கு அவசியம் இல்லை என்று ஞானவேல் ராஜா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் ரிலீசான படத்தில் முன்னதாக ஒவ்வொரு கேரக்டருக்கும் அறிமுக வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகவும் ஆனால் அது படத்தின் ஓப்பனிங்கில் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இது மறைமுகமாக ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை குறிப்பிடுவதாக அமைந்திருந்தது. இதுகுறித்து தற்போது அடுத்தடுத்த விமர்சனங்களை ஞானவேல் ராஜா சந்தித்து வருகிறார். இதையடுத்து அவர் தற்போது தன்னுடைய பேச்சிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜகா வாங்கிய ஞானவேல் ராஜா: தான் பாலிவுட்டின் கேல் கேல் மெயின் படத்தை பற்றிதான் பேசியதாகவும் அந்தப் படம் சிறப்பான வசூலை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஞானவேல் ராஜா, ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை தான் குறிப்பிடவில்லை என்றும் தற்போது விளக்கம் அளித்துள்ளார். படத்தில் சூர்யா, பாபி தியோல் திஷா பதானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளது அவரது ஓவர் கான்ஃபிடன்சை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. படம் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்பது குறித்து அடுத்த மாதத்தில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X