டெடி இயக்குனருக்கு சர்ப்ரைஸாக கார் பரிசளித்த பிரபல தயாரிப்பாளர்!

சென்னை : தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை இயக்கி வெற்றிகளை கொடுத்து வருபவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை நிறுத்தம் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமையை புகுத்தி புகுத்தி வரும் சக்தி சௌந்தர்ராஜனுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சர்ப்ரைசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதை நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ரகத்தில்

ஒவ்வொரு ரகத்தில்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் திரைப்படத்திலேயே பேங்க் கொள்ளை மையப்படுத்தி எடுத்த மிகவும் சுவாரசியமான இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

முதல்முறையாக ஜாம்பி

முதல்முறையாக ஜாம்பி

நாணயம் வெற்றியைத் தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை என்ற அட்டகாசமான படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் ஹிட்டடித்தது. பெரும்பாலும் ஹாலிவுட்டில் மட்டும் ஜாம்பி படங்களை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்று புதுவிதமான அனுபவத்தை கொடுக்க தமிழில் முதல்முறையாக ஜாம்பி திரைப்படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார் . நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படம் முதல் தமிழ் ஜாம்பி திரைப்படம் என்ற பெயரைப் பெற்றது.

வரிசையாக ஹிட்

வரிசையாக ஹிட்

மிருதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியுடன் கைகோர்த்து டிக் டிக் டிக் என்ற விண்வெளி படத்தை கொடுத்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இவ்வாறு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்த சக்தி சிதம்பரம் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான டெடி யில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்திருந்தார்.

Recommended Video

இந்தியாவிலேயே முதலில் Biography எழுதியவர் | Mr. Kalaivanar part-04 | Rewind Raja | Filmibeat Tamil
ஞானவேல்ராஜா காரை பரிசளித்துள்ளார்

ஞானவேல்ராஜா காரை பரிசளித்துள்ளார்

பேசும் டெடி,காதல்,செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த bபடமாக வெளியான டெடி குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ஓடிடியில் அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம் என்ற தனிச் சிறப்பை பெற்றது. டெடி திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜனுக்கு சர்ப்ரைசாக ஞானவேல்ராஜா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X