Kanguva: அடேங்கப்பா.. விமர்சனங்களை கடந்து கங்குவா இத்தனை கோடி வசூலா?.. ஞானவேல் ராஜா செம ஹேப்பியாம்!

சென்னை: நடிகர் சூர்யா -சிவா கூட்டணியில் உருவாகி நேற்றைய தினம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கங்குவா படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆயினும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

சர்வதேச அளவில் 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டுமே 22 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே கங்குவா படத்தின் வசூல் 14 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

suriya kanguva movie gnanavel raja

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த முயற்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் சூரரை போற்று, ஜெய்பீம், விக்ரம் படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் சர்வதேச அளவ்ல 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்திற்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக மற்ற படங்களில் நடிக்காமல் இருந்தார் சூர்யா. இந்தப் படத்திற்காக அதிகமான அளவில் பிரமோஷன்களை சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர். இந்தியாவில் மட்டுமில்லாமல் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டனர்.

கங்குவா படம்: இந்நிலையில் இந்தப் படம் நேற்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருந்தார் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா. ஆயினும் படத்தில் கதையே இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சூர்யா கேரியரில் இந்தப் படம் worst என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் சூர்யா. தற்போதைய காலகட்டத்தையும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தையும் இணைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஞானவேல் ராஜா உற்சாகம்: முன்னதாக இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை பாராட்டி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கங்குவா கண்டிப்பாக 2000 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலிக்கும் என்றும் ஒரே மாதத்தில் சக்சஸ் மீட்டில் மீண்டும் சந்திக்கலாம் என்றும் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சையும் சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் படத்தின் வசூல் சர்வதேச அளவில் சிறப்பாக அமைந்து வருவதாக ஞானவேல் ராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் லைஃப் டைம் வசூலை இந்தப் படம் பெற்று வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வசூலை குவிப்பதாக மகிழ்ச்சி: துவக்கத்தில் இந்தப் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் கலந்து பார்த்ததாகவும் தொடர்ந்து பேமிலி, பெண்கள் உள்ளிட்டவர்கள் பார்த்து வருவதாகவும் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளதாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மிகச்சிறப்பான மனநிலையில் தான் உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் சூர்யாவின் லைஃப் டைம் கலெக்ஷனை படம் இரு தினங்களில் முறியடிக்கும் என்று கூறியுள்ள ஞானவேல் ராஜா, தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஒபனிங் வசூல் கிடைத்துள்ளதாகவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

சூர்யா உற்சாகம்: கர்நாடகா, வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இந்தியில் மிகச்சிறந்த விமர்சனங்கள் வந்துள்ளதாகவும் இதுவரை வந்த படங்களில் சிறப்பான கலெக்ஷன் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சூர்யா, சிவாவின் பெஸ்ட் வேலை மற்றும் மற்றவர்களின் ஆசிர்வாதம் இந்தப் படத்திற்கு இருந்ததாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்திய அளவில் இந்தப் படம் சிறப்பான 3டி படமாக வெளியாகியுள்ளதால் குழந்தைகளையும் இந்தப்படம் கவர்ந்துள்ளதாகவும் சூர்யாவும் இந்தப் படத்தின் வரவேற்பையடுத்து கொண்டாட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X