Kanguva: தீபாவளிக்கு ரிலீசாகாததால இப்படி ஒரு நன்மையா.. கங்குவா படத்தின் ஸ்டேடஸ் சொன்ன தயாரிப்பாளர்!

சென்னை: நடிகர் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ளது கங்குவா படம். சூர்யா இந்த படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ளார். பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இரண்டு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளார். இதில் கங்குவன் கேரக்டர் படத்தில் அதிகமாக ஏறக்குறைய 2 மணி நேரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

suriya kanguva movie gnanavel raja

கங்குவா படம்: நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படம் இம்மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில் தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர் பிரான்சிசாக ஒரு கேரக்டரிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவன் என்ற கேரக்டரிலும் சூர்யா நடித்துள்ளார்.

இருவேறு கேரக்டர்கள்: இந்த இரு கேரக்டர்களில் கங்குவன் கேரக்டர் படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் ஏறக்குறைய 2 மணி நேரங்கள் இந்த கேரக்டர் படத்தில் இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். முன்னதாக கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் கங்குவா படம் தன்னுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது.

11,500 திரையரங்குகளில் கங்குவா ரிலீஸ்: தொடர்ந்து படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 14ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகாமல் ரிலீஸ் தேதி தள்ளி போனதால் மிகப்பெரிய நன்மை கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தீபாவளியை ஒட்டி கங்குவா படம் ரிலீஸ் ஆகியிருந்தால் 4000 முதல் 5000 ஸ்கிரீன்கள் மட்டுமே கிடைத்திருக்கும் என்றும் தற்போது சோலோவாக இந்த படம் ரிலீசாகவுள்ளதால் சர்வதேச அளவில் 11,500 ஸ்கிரீன்களில் படம் ரிலீசாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஞானவேல் ராஜா பாசிட்டிவ்: முன்னதாக தீபாவளிக்கு ஏன் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்று அதிகமான கேள்விகளை தான் எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். எந்த விஷயத்திலும் அதில் இருக்கும் பாசிட்டிவ்வை எடுத்துக் கொள்ளும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் இந்த அணுகுமுறை அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை எட்டும் என்றும் அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X