சூர்யா 42 டீசர் எப்போது தெரியுமா?.. உறுதி செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

சென்னை: சூர்யா 42 படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று பேட்டி ஒன்றில் படத்தின் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் சூர்யா கோலிவுட்டின் முன்னணி நடிகர். டாப் 5 இடங்களுக்குள் இருக்கும் சூர்யா தற்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் சமூக நோக்குடனும், மிகச் சிறந்த கதைகளை கொண்டது. இதனால் சூர்யா படத்துக்கென்று பன்மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா 42வை இயக்கும் சிவா

சூர்யா 42வை இயக்கும் சிவா

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு அடுத்ததாக அவரை பலரும் ட்ரோல் செய்தனர். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத சிவா, நம்பிக்கையுடன் சூர்யாவிடம் கதை கூறினார். கதையை கேட்ட சூர்யாவுக்கு பிடித்துப்போக படத்தில் நடிக்கவும் ஒத்துக்கொண்டார். அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த சூர்யா

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த சூர்யா

இந்தப் படத்தில் சூர்யா கூடுதல் அக்கறையுடன் நடித்துவருகிறார். எல்லாப் படத்துக்குமே சூர்யாவின் டெடிகேஷன் அட்டகாசமாக இருந்தாலும் இதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துகிறார் என படக்குழுவினர் கூறுகின்றனர். சமீபத்தில்கூட படத்துக்காக ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

படம் எப்போது ரிலீஸ் ஆகிறது

படம் எப்போது ரிலீஸ் ஆகிறது

10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகும் இப்படம் பான் இந்தியா அளவில் வெளியிடப்படவிருக்கிறது. சூர்யா 42 டைட்டில் ப்ரோமோ ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தப் படமானது டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் வெளியிட்ட டீசர் அப்டேட்

தயாரிப்பாளர் வெளியிட்ட டீசர் அப்டேட்

இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதுகுறித்த அப்டேட்டை வெளியிட வேண்டும் எனவும் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "படத்தின் டீசர் மே மாதம் வெளியாகும். டைட்டிலும், ரிலீஸ் தேதியும் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்" என கூறினார். இதனைக் கேட்ட சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X