twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனால் எனக்குத் தான் 20 கோடி நஷ்டம்.. ஒரே போடு போட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

    |

    சென்னை: மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் தனக்குத் தான் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

    ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது.

    அந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ. 4 கோடி பாக்கி இருப்பதாக சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்த நிலையில், சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அடித்து உருளும் போட்டியாளர்கள்...பணப்பெட்டியை வெல்ல போவது யார்? அடித்து உருளும் போட்டியாளர்கள்...பணப்பெட்டியை வெல்ல போவது யார்?

    4 கோடி பாக்கி

    4 கோடி பாக்கி

    மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள 4 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்தது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

    தடை செய்யணும்

    தடை செய்யணும்

    மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சியான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    12 கோடி கொடுத்திருக்கேன்

    12 கோடி கொடுத்திருக்கேன்

    இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    20 கோடி நஷ்டம்

    20 கோடி நஷ்டம்

    ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இரக்கமின்றி

    இரக்கமின்றி

    வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.

    உண்மையை மறைத்து

    உண்மையை மறைத்து

    மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார்.
    ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்துள்ளார்.

    English summary
    Producer Gnanavel Raja slams Sivakarthikeyan over Mr Local loss and filed petition in court against Sivakarthikeyan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X