twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் மரணம்.. மாரடைப்பால் உயிர் பிரிந்தது.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    பெங்களூரு: பிரபல தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமானவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக, இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது சினிமா துறையினரை கவலையடைய செய்துள்ளது.

    விஜய் ரெட்டி

    விஜய் ரெட்டி

    கடந்த சில நாட்களுக்கு முன், கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி சென்னையில் மரணமடைந்தார். சுமார் 50 படங்களை இயக்கியுள்ள இவர், விட்டலாச்சாரியாவிடம் உதவி எடிட்டராக சேர்ந்து சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் மரணம், கன்னட சினிமா துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

    கன்னட தயாரிப்பாளர்

    கன்னட தயாரிப்பாளர்

    இதையடுத்து, மூத்த நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 65. சுமார் 50 வருடங்களாக சினிமா மற்றும் டிவியில் நடித்து வந்தவர் இவர். இந்நிலையில், பிரபல கன்னட தயாரிப்பாளர் எச்.கே.ஶ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந் துள்ளார். அவருக்கு வயது 70. இவரை பேக்கரி சிவா என்று அழைப்பதும் உண்டு.

    குண்டனா மடுவே

    குண்டனா மடுவே

    இவர் கன்னடத்தில் பல படங்களைத் தயாரித்துள்ளார். ஜக்கீஸ், ராகிணி நடித்த குண்டனா மடுவே, பட்டன்கா பன்டா புட்டா, சந்தன் சிகுரு உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மறைவுக்கு இரங்கல்

    மறைவுக்கு இரங்கல்

    திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் நேற்று மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது கன்னட சினிமா துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த ஹெச்.கே.ஶ்ரீனிவாஸுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதையடுத்து கன்னட திரையுலகினர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Popular producer H K Srinivas, also known as Bakery Shiva, breathed his last at a private hospital in Bengaluru.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X