twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்கப்பணத்தை விஷால் வீணடிக்கிறார்.. ஐசரிகணேஷ் கு‌ற்ற‌ச்சாட்டு!

    |

    சென்னை : விஷால் அணி கோர்ட்டுக்கு சென்று சங்கத்தின் பணத்தை வீண் செலவு செய்வதாக ஐசரிகணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் நடந்தது. அந்த தேர்தலுக்கு பின் முடிவுகளை கூற நீதிமன்றம் தடை விதித்தது. பின் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை நீதிமன்றம் எடுத்து விசாரணை செய்தது. ஒரு புறம் நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டி பாதி கட்டாமல் இருக்கிறது .

    Producer isari ganesh pressmeet

    இதனையடுத்து நடிகர் சங்க தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் நடந்து முடிந்த நடிகர் சங்கதேர்தலை ஏற்றுகொள்ள முடியாது புதிய வாக்காளர் கணக்கெடுப்பு நடத்த பட்டு மூன்று மாதங்களுக்குள் நடிகர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

    இது தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஐசரி கணேஷ். முதலில் நீதி வென்றது தர்மம் வென்றது என கூறினார். விஷால் அணி கோர்ட்டுக்கு சென்று சங்கத்தின் பணத்தை முழுவதுமாக செலவு செய்து விட்டது என குற்றம் சாட்டினார். மேலும் ஆறு மாத காலமாக நடிகர்கள் எவருக்கும் ஓய்வூதியம் சென்று சேரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    Producer isari ganesh pressmeet

    தனது சொந்த பணத்தை செலவு செய்து தான் பொங்கலுக்கு பல நாடக நடிகர்களுக்கு வேட்டி சேலை மற்றும் பணம் கொடுத்தாக ஐசரிகணேஷ் கூறினார். மேலும் தான் தொடர்ந்து 200 நடிகர்களுக்கு மாதம் 1000ரூபாய் கொடுத்து வருவதாக கூறினார்.

    ஆனால் விஷால் அணி நடிகர்கள் பற்றி கவலை இல்லாமல் தொடர்ந்து நீதிமன்றம் சென்று பணத்தை செலவு செய்து வருவதாக கூறினார். மேலும் இந்த நீதிமன்ற தீர்ப்பை விஷால் எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளார். இதன் மூலம் அவரின் உண்மை முகம் தெரிந்துள்ளது என்று ஐசரிகணேஷ் கூறினார்.

    மேலும் யாரிடமும் சொல்லவில்லை என்று ஒரு தகவலையும் கூறினார் ஐசரிகணேஷ் .விஷால் மற்றும் கார்த்தியை வைத்து கருப்பு ராஜா வெள்ள ராஜா என ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பித்ததாகவும் அந்த படத்தின் டேபில் பிராவிட்டே (படவெளியீட்டுக்கு முன் வரும் லாபம் ) 15 கோடி வந்தததாகவும். ஆனால் விஷால் வந்து நடிக்காததால் படம் கைவிட பட்டதாகவும் கூறினார்.

    அப்படி விஷால் வந்து நடித்திருந்தால் பட லாபத்திலே இன்று கட்டடத்தை கட்டி முடித்திருக்கலாம் என்று கூறினார். இறுதியாக பேசிய ஐசரி கணேஷ், அடுத்த மாதத்தில் இருந்து தனது சொந்த செலவில் ஓய்வூதியம் கொடுக்க போவதாகவும் தெரிவித்தார் .

    ஐசரிகணேஷ் அணியினர் மொத்தமாக கூறுவது விஷால் அணி விலகி கொண்டால் தாங்களே சொந்த செலவில் கட்டடத்தை கட்டி முடித்து விடுவோம் ஆனால் இவர்கள் தொடர்ந்து நீதிமன்றம் செல்வது வீண்செலவு என கூறியுள்ளனர். மேலும் இந்த கட்டடம் கட்டி முடித்து விட்டால் மாதம் 50லட்சத்திற்கு மேல் லாபம் வரும் அதை வைத்து ஓய்வூதியம், நலிவடைந்த நடிகர்களுக்கு உதவித்தொகை என அனைத்தையும் சரிகட்டி விடலாம் இதுதான் அந்த கட்டடத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.

    English summary
    Producer isari ganesh pressmeet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X