சிம்புவுடன் என்ன பிரச்சனை? வெந்து தணிந்தது காடு 2 எடுக்கப்படுமா? தயாரிப்பாளர் பேட்டி!
சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் பி.டி சார் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றார்.
கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள பி.டி. சார் படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ்னீ ஸ்காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஹப் ஹாப் ஆதி: இப்படத்தின் டிரைலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஹப் ஹாப் ஆதி, 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக அரண்மனை 4 படத்திற்கு இசை அமைத்தேன், இப்படத்திற்கு எல்லோரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எனக்கு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.
விரைவில் வெந்து தணிந்தது காடு 2: இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்பு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடித்துத் தரவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் நான் புகார் கொடுத்து இருக்கிறேன். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார். சிம்பு நடிப்பதற்கு தடை என பரவி வரும் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிம்பு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்துவிட்டு வேறு படங்களுக்கு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறோம். அவரும் விரைவில் படம் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு பிறகு வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் வருவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.
ரஜினியை சந்தித்தது ஏன்: ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான், எங்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நடிப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசினார்.


Click it and Unblock the Notifications