சொந்த பிள்ளைகளாய் நினைத்து சீர்வரிசை.. 9 ஜோடிகளுக்கு திருமணம்! ஐசரி கணேஷின் நெகிழ்வான பதிவு
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமான அதே நேரத்தில் சினிமா மீது எப்போதும் ஆர்வத்துடனே இருக்கும் தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ். தமிழ் சினிமாவில் பல இளம் டேலண்ட்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமைக்குரிய தயாரிப்பாளர். இவரது தயாரிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் படங்கள் உருவாகி வருகிறது. இப்படி இருக்கையில் பிப்ரவரி 20ஆம் தேதி தனது வேல்ஸ் நிறுவனத்தின், கல்லூரி வளாகத்திலேயே 9 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு சீர்வரிசை கொடுத்து, அழகு பார்த்துள்ளார்.
இது தொடர்பாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " எங்கள் VISTAS வளாகத்திற்குள் உள்ள சிவாலயத்தில் 9 அழகான ஜோடிகளின் திருமணத்தை நடத்துவது உண்மையிலேயே ஒரு மரியாதையாகவும் மற்றும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

9 ஜோடிகளுக்கு திருமணம்: அவர்கள் அவர்களது இல்லற வாழ்வில் இணைந்து கொண்டதைக் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஒன்றாக அமைந்தது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒளி மற்றும் செழிப்பின் அடையாளமாக வெள்ளி தியா உட்பட கல்யாண சீர் வழங்கி நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த 9 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க நாங்களும் ஒரு காரணம் என்பது, என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படியான செயல்கள் எங்கள் நிறுவனத்தின் ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாகத் தொடர்கிறது.
நெகிழ்ச்சி: இந்த 9 ஜோடிகளின் இல்லற வாழ்க்கை பயணமானது அன்பு, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளால் என்றைக்கும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவும் அத்துடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் ஐசரி கணேஷை பாராட்டி வருகிறார்கள்.

சீர்வரிசை: அவர் திருமணம் செய்து வைத்த தம்பதிகளுக்கு தாலி வாங்கிக் கொடுத்தும் குத்துவிளக்கு, தட்டு, பாய், பெட், ஹாட் பாக்ஸ், மிக்ஸி, அரிசி, மின் விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள்,குக்கர், சாமி படம் என சீர்வரிசை கொடுத்துள்ளார். மணமக்களை மேடை ஏற்றி ஒரே நேரத்தில் தாலி கட்ட வைத்து, ஒன்றன் பின் ஒன்றாக அம்மி மிதிக்க வைத்து, மெட்டி அணிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களைம் பகிர்ந்துள்ளனர். 9 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்ததைப் பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications