'டிரஸ் போட மறந்துட்டீங்களா'... மேடையிலேயே நாயகியை கலாய்த்த தயாரிப்பாளர்!

இசை வெளியீட்டு விழாவுக்கு ஹீரோயின் அணிந்து வந்த உடை பற்றி தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம் விமர்சித்தார்.

Recommended Video

நாயகியின் உடையை மேடையில் கலாய்த்த தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம்-வீடியோ

சென்னை: படுகவர்ச்சியாக உடையணிந்து வந்த நாயகியை, தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் விழா மேடையிலேயே கிண்டல் செய்தார்.

நீல்கிரிஸ் டிரீம் எண்டர்டெயின்மென்ட் சார்பில் நீல்கிரிஸ் முருகன் தனது மகன் ராஜ்குமாரை ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் 'கூத்தன்'. ஸ்ரீஜித்தாகோஷ், கிரா நாராயணன், சோனல் சிங் என மூன்று ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவாவின் சகோதரர் நகேந்திர பிரசாத் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களை தவிர கே.பாக்யராஜ், ஊர்வசி, ரேணுகா, மனோபாலா, சினிதா, கலா மாஸ்டர், ராம்கி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.

Producer Jaquar Thangam comments on heroines costume

கூத்தன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஹீரோயின் கிரா நாராயணன், டியூப்லெஸ் டாப் வகை ஆடையை அணிந்து வந்திருந்தார். படுகவர்ச்சியாக வந்திருந்த அவர் மீதே பலரது பார்வையும் வீற்றிருந்தது.

இந்நிலையில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், கிராவின் ஆடை குறித்து மேடையிலேயே கிண்டல் செய்தார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, 'கூத்தன் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜ்குமார் சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். பாடல்களும் சிறப்பாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளதாக கூறினர். இங்கு வந்துள்ள ஹீரோயின் கிராவின் ஆடையை பார்த்து எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. குளித்துவிட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு வந்துவிட்டாரோ... ஒருவேளை டிரஸ் போட மறந்துவிட்டாரோ என நினைத்தேன்.

பிறகு தான் இந்த டிரஸ்சே அப்படிதான் என்று சொன்னார்கள். நான் இதுபோன்ற ஆடைகளை பார்த்ததில்லை என்பதால் அப்படி நினைத்தேன். இங்கு வந்துள்ள புகைப்படக் கலைஞர்கள் நிறைய போட்டோக்களை எடுத்துக்கொள்ளுங்கள்", என அவர் கூறினார்.

ஜாக்குவார் தங்கம் இவ்வாறு பேசியதும் விழாவுக்கு வந்திருந்த அனைவருமே சிரித்துவிட்டனர். இதனால் மேடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நாயகிக்கு தர்மசங்கடமாக ஆகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X