தயாரிப்பாளர் வெளியிட்ட 'ஓவியா' போஸ்டர்!
நடிகரும் தயாரிப்பாளருமான ஜே.எஸ்.கே.சதீஷ் ஓவியா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
சென்னை: காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் 'ஓவியா' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் வெளியிட்டார்.
புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் திரைப்படம் 'ஓவியா'. இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் - சூர்யா நாராயணன்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் வெளியிட்டார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











