தொடர்ந்து மிரட்டும் வைரஸ்.. பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு!
சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அது தொடர்ந்து பரவி வருகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் நாள் தோறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறைகிறது கொரோனா
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகிறாவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 79,46,429 ஆக இருக்கிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

சிகிச்சை பெற்று
இந்தத் தொற்று பிரபலங்களையும் விடவில்லை. தமன்னா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், உள்பட பலருக்கும் பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

தொற்று உறுதியானது
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர், ராமின் தங்கமீன்கள், வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்த தரமணி உள்பட சில படங்களை தயாரித்தவர் இவர். உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அக்னிச் சிறகுகள்
இதை தொடர்ந்து அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கடந்த சில நாட்களாகத் தன்னைத் தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். சில படங்களில் நடித்துள்ள ஜே.எஸ்.கே, இப்போது அக்னிச் சிறகுகள், கபடதாரி உள்பட படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











