சூர்யா கங்குவாவை ஓரங்கட்டிவிட்டு.. பிரபாஸ் சலாரை பாராட்டிய ஞானவேல் ராஜா.. அப்போ அவ்ளோதானா?
சென்னை: சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ஞானவேல் ராஜா பேசியது சூர்யா ரசிகர்களையே பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக 3டியில் உருவாகி வருகிறது கங்குவா.
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவாவை விட்டு பிரபாஸின் சலார் படத்தை பாராட்டி பேசி உள்ளார்.

மிஷன் இம்பாசிபிள் மாதிரி: ஹாலிவுட்டில் டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் ஒன்றில் ஆரம்பித்து 7 பாகங்கள் என சர்வதேச அளவில் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தமிழில் அது போல எப்போ சார் ஒரு படம் வரும் என பத்திரிகையாளர் ஒருவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பார்த்து அந்த கேள்வியை முன் வைத்தார்.
உடனே தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்செயன் கம்முனு இருக்காமல் கங்குவா இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எப்போ வரும்னு கேட்கிறார் சார் என சூர்யா படத்தை சைக்கிள் கேப்பில் உள்ளே இழுத்துக் கோர்த்து விட்டார்.
கங்குவா கிடக்குது கங்குவா: உடனடியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவாவை அப்படியே கழட்டி விட்டு தனஞ்செயன் சொன்னதை கண்டுக் கொள்ளாமல் அவர் என்ன கேட்கிறார்னா டாம் க்ரூஸ் படத்துக்கு இணையா ஒரு தமிழ்ப் படம் எப்போ வரும்னு, அந்த மாதிரி படமாத்தான் பிரபாஸின் சலார் உருவாகிறது என ஒரே போடாக போட்டு விட்டார்.
என்ன பித்தலாட்டம் இது: பிரபாஸின் சலார் படம் வந்த பிறகு ஹாலிவுட்டில் இப்படியொரு படம் எடுக்கணும்னு அவங்க நினைப்பாங்க என பிரபாஸ் படத்தை கெத்தாக பாராட்டி உள்ளார் ஞானவேல் ராஜா.
அந்த பேட்டியை பார்த்த பலரும் இதற்கு இது பதில் இல்லையே.. தமிழ்ப் படம் தானே அவர் கேட்டார். கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படம் எப்படி தமிழ்ப் படம் ஆகும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் கங்குவா படத்தின் மீது தயாரிப்பாளருக்கே பெரிய நம்பிக்கை இல்லை போல என ட்ரோல்கள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











