நீ பெட்ரூம் பத்தியே பேசிட்டு இருக்க..பயில்வானை அடிக்க பாய்ந்த தயாரிப்பாளர் கே.ராஜன்!

சென்னை : இசைவெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் கே ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், காமெடி நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து சொந்தமாக யூட்யூப் சேனலை ஆரம்பித்தார்.

அந்த சேனலில் நடிகை, நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து அப்பட்டமாக பேசி வருகிறார்.

கட்சிக்காரன் இசைவெளியீட்டுவிழா

கட்சிக்காரன் இசைவெளியீட்டுவிழா

இந்நிலையில், கட்சிக்காரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவருக்கு பட்டு சால்வை போர்த்தப்பட்ட போது, இந்த பட்டு சால்வையில் வியர்வையைக்கூட துடைக்க முடியாது. இதனால், காதிக்கிராஃப்டில் சால்வை வாங்குங்கள் என்றும், இந்தியா இப்போது வல்லரசாகிவிட்டது, எதற்கு எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டவேண்டி இருப்பதாக பேசிக்கொண்டு இருந்தார்.

கேள்வி கேட்ட பயில்வான் ரங்கநாதன்

கேள்வி கேட்ட பயில்வான் ரங்கநாதன்

அப்போது, அங்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன், நீங்கள் ஜிஎஸ்டியை பற்றி பேசி தயாரிப்பாளர் வீட்டிற்கு ரெய்டு வரவைத்துடுவீர்கள் போல என்றார். இதற்கு ஆரம்பத்தில் பொறுமையாக ராஜன் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி ஏன் மேடையில் பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் பயில்வான்.

போடா மாமா பயலே

போடா மாமா பயலே

இது இசைவெளியீட்டு விழா உனக்கு என்னால் இங்கு பதில் சொல்ல முடியாது தனியாக பிரஸ் மீட்வைத்து பேசிக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் எவ்வளவோ கூறிய போதும், பயில்வான் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ராஜன், போடா மாமா பயலே, தாய்மார்கள் பற்றி தரக்குறைவாக பேசுற, எப்போதும் பெட்ரூம் பத்தி பேசும் எச்சப்பயலே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டினார்.

தொடர்ந்து அதே வேலை

தொடர்ந்து அதே வேலை

திரைப்பிரபலங்கள் பற்றி அசிங்கமாக, தரக்குறைவாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே ராஜன் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இவர் மட்டுமில்லாமல் இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பீச்சில் இவரை பார்த்ததும அடிக்க பாய்ந்தார். யார் என்ன பேசினாலும்,புகார் கொடுத்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் தொடர்ந்து நடிகைகளை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X