K Rajan: தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா.. அசிங்கமாக இல்லையா.. அசோக் செல்வனை திட்டிய கே ராஜன்!

சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அவரது சம்பளம் இரண்டு முதல் மூன்று கோடிகளை தாண்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் நடந்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் திருமலை படத்தின் பிரமோஷனுக்கு கூட அசோக் செல்வன் வராததை சுட்டிக்காட்டி தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

Ashok selvan Emakku thozhil romance K Rajan

நடிகர் அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வன். அவந்திகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ப்ளூ ஸ்டார், போர் தொழில் படங்களை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக உள்ளது எமக்குத் தொழில் ரொமான்ஸ். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி: இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குநர் ஆர்கே செல்வமணி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் மற்றும் அவந்திகா இருவருமே படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். டப்பிங் பேசுவதற்கு முன்னதாக அசோக் செல்வன் படத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய மீதமுள்ள சம்பளத்தை கொடுக்குமாறு தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அசோக் செல்வனை திட்டிய கே ராஜன்: இதை அடுத்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கூட வர முடியாத அளவிற்கு அசோக் செல்வன் பிஸியாகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து டப்பிங்கிற்கு முன்னதாக அசோக் செல்வன் சம்பள பாகியை கேட்டு நெருக்கடி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பிய கே ராஜன் அசோக் செல்வனுக்கு அசிங்கமாக இல்லையா என்று திட்டித் தீர்த்தார். மேலும் பிரமோஷனுக்கே அசோக் செல்வன் வராததை சுட்டிக்காட்டி தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா என்றும் கேள்வி எழுப்பினார்.


தயாரிப்பாளரை வேதனைப்படுத்திய ஹீரோ: தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லையென்றால் நடிகர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு அசோக் செல்வனுக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறது. இதனிடையே, ஆந்திராவில் வில்லன் நடிகருக்கும் ஒரு நடிகைக்கும் பணத்தை வாங்கிவிட்டு ஷுட்டிங் வராததற்காக தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்ததை சுட்டிக்காட்டிய கே ராஜன், தொடர்ந்து அவர்கள் அபராதம் செலுத்தியபின்பே ஷுட்டிங்கிற்கு வந்ததாகவும் தயாரிப்பாளரை வேதனைப்படுத்திய ஹீரோ யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பதாகவும் கே ராஜன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X