சரக்கு, தம் அடிக்கும் ஹீரோயின்.. டக்கர் படத்தை கிழித்த கே ராஜன்!
சென்னை: காசிமேடு கேட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சித்தார்த் நடித்த டக்டர் படத்தை தாறுமாறாக விமர்சித்தார் கே ராஜன்.
இத்திரைப்படத்தை இயக்குனர் ஒய். ராஜ்குமார் இயக்கி உள்ளார். இதில், வேணுகோபால, யஷ்வன், சுரபி திவாரி, கிஷ்கை சவுத்ரி, ஏபிஎம்.சாய்குமார், பர்த்து, ராகம்மா ரெட்டி, கங்காதர், அனுஷா ஜெயின், சுதிக்ஸ் ஜகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பெங்களூர், சென்னையில் காசிமேடு மற்றும் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

காசிமேடு கேட்: இந்நிலையில் காசிமேட் கேட் படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு பேசினார். நான் பிறந்து வளர்ந்த இடம் காசிமேடு தான். அந்த பகுதியில் உள்ள மக்கள் நல்ல மக்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யமாட்டார்கள். அங்கு ஒரு பள்ளியில் தான் நான் படித்தேன். அப்போது முதலமைச்சரான காமராஜர் 8ம் வகுப்பு வரைக்கும் இலவச கல்வி கொடுத்தார். அதில் தான் நான் படித்தேன்.
கே ராஜன் பேச்சு: காமராஜரால் நான் படித்ததால், காமராஜர் பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கினேன். அவரால் பல பிற்படுத்தப்பட்ட மக்கள் டாக்டர், ஐஏஎஸ் என்று பல பதவிகளுக்கு வந்தார்கள். நான் தொடங்கிய பள்ளி இன்றும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதில் காசிமேடு பகுதி மக்கள் படித்து இன்று கல்வியில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெருமைதான்.
தமிழ் மக்கள் வாழவைப்பார்கள்: வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு காசிமேடு கேட் படத்தின் தயாரிப்பாளர் தமிழ்நாட்டை நம்பி வந்து இருக்கிறார் இவர் நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ் மக்கள் கதை நன்றாக இருந்தால் ரசித்துப் பார்ப்பார்கள் அப்படித்தான் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்றார்.
தவறுகளை அனுமதிக்கக்கூடாது: மேலும் தொடர்ந்து பேசிய அவர், சிவாஜியுடன் ஒரு படத்தில் வக்கீலாக நடித்தேன் அப்போது, என்னுடைய முடியை சரி செய்ய சொன்னார். இப்போது நிறைய நடிகர்கள் தாடி வைத்துக்கொண்டு நடிக்கிறார்கள். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக அனைத்து தவறுகளையும் நாம் அனுமதிக்கக்கூடாது.
தயவு செய்து வேண்டாம்: சமீபத்தில் சித்தார்த் நடித்த டக்கர் என்கிற படத்தை இன்டர்வல் வரை பார்த்தேன். அதில், ஹீரோயின் சிகரெட் பிடிப்பது போலவும் மது குடிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. ஆண்கள் குடிக்கு அடிமையாகி கெட்டுப் போய்விட்டார்கள். பெண் குடிப்பது போல் படம் எடுத்தால் இந்த நாட்டின் கலாச்சாரம் என்னாகும். இயக்குநர்களே தயவு செய்து தாய்மார்களையும் இந்த தீய பழக்கத்திற்கு அடிமையாக்காதீர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











